இடுகைகள்

ஐஸ்வர்யா கணேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஐடி சென்னை ஆராய்ச்சி மன்றில் - எதிர்கால இந்தியா 2047 - செய்தி சேகரிப்பும் பயணக்குறிப்பும்

படம்
OZY   ஏழாம் தேதி சற்று தாமதமாக தரமணிக்கு சென்றோம். எப்படி என்பதை முதல் பகுதியில் கூறியிருந்தேன். தேநீர் நேரம் முடிந்து கருத்தரங்கம் மதிய உணவு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நான் தவறவிட்டது முக்கியமான பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சி பற்றியது. அதனை அடுத்த நாள்தான் இணையத்தில் தேடிப்பார்க்கும்போதுதான் தெரிந்தது.  கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் என்ன சொன்னார் என்று ஒருவழியாக ஆராய்ந்து பார்த்ததில், அவர் எண்ணெய் குழாய்கள் அரிக்கப்படுவது பற்றி ஆராய்ந்து சொன்னார். அதாவது அல்ட்ராசோனிக் அலைகள் மூலம், குழாய்களை ஆராய்ந்து அதன் அரிப்பைக் கண்டுபிடிப்பது என விளக்கமாக சொன்னார். மிகவும் முக்கியமான குழப்பமானதாகவும் எனக்குத் தோன்றியது. இதனை நாளிதழுக்கு எழுதும்போது, தேர்வு செய்யவில்லை.  ஒன்பதாம் தேதி காலையில் அலுவலகத்திற்கு வரவில்லை. நேராக அறையில் குளித்து முடித்து மலம் கழித்துவிட்டு, மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டேன். அங்கு வந்த ரயிலில் ஏறினேன். ஏறிய பெட்டியில், சிவப்பு நிற சுடிதார் அணிந்த பெண் என்னை உற்றுப் பார்த்தார். நான் அதற்குப் பிறகு  அவரைப் பார்க்கவே இல்லை. கஸ்தூரிபாய் நகரில் இறங்கினார்.