இடுகைகள்

உலகம்- அயர்லாந்து கருக்கலைப்பு உரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருக்கலைப்புக்கு அனுமதி!

படம்
கருக்கலைப்புக்கு அனுமதி ! அண்மையில் அயர்லாந்து கருக்கலைப்பு தடைக்கு எதிரான சட்டத்தை நீக்க வாக்கெடுப்பு நடத்தியது . அதில் சட்டத்தை நீக்க 66.4 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர் . மக்களின் முடிவை வரவேற்று டப்ளின் கேஸ்டிலில் உரையாற்றி பிரதமர் லியோ வராத்கர் , " பெண்களுக்கு முடிவு எடுப்பதற்கான வாய்ப்புக்களை தருவதன் மூலம் நம்பிக்கை மற்றும் மரியாதையை உருவாக்க முடியும் . இனியும் பெண்கள் நாட்டின் பெயரால் அவமானப்படவேண்டியதில்லை . இது வரலாற்று சிறப்பான முடிவு " என்று பேசினார் . ஓரினச்சேர்க்கையாளரான லியோ வராத்கர் பிரதமராக தேர்வு பெற்றது கத்தோலிக்க நாடான மாறிவரும் அயர்லாந்துக்கு சான்று என்பதை கருக்கலைப்பு தடைக்கு எதிரான வாக்கு சதவிகிதம் உறுதி செய்துள்ளது . 1983 ஆம் ஆண்டு உருவான எட்டாவது சட்டத்திருத்தத்தை மக்களின் வாக்கு செயலிழக்க செய்துள்ளது .  2012 ஆம் ஆண்டு வயிற்றில் இறந்துபோன குழந்தையை வெளியே எடுக்க அயர்லாந்து சட்டம் அனுமதிக்காததால் இறந்து சவிதா ஹாலப்பனார் இச்சட்டத்தை ஒழிக்க முக்கியக்காரணம் . கத்தோலிக்க சர்ச்களின் ஊழலும் மக்களின் மத்தியில் தோற்றுவித்த அவநம்பிக