இடுகைகள்

அகண்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பங்குச்சந்தையும் அகண்டா திரைப்படமும்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  புகைப்படக் கலைஞர் வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  குடியரசு தினத்தன்று நாளிதழ் விடுமுறை என்பதால், சற்றே ஆசுவாசம் கிடைத்துள்ளது. இன்று வடபழனியிலுள்ள அறைக்கு சென்று மோகன்ராஜ் அண்ணாவைப் பார்த்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்தேன். அவர், இப்போது ஷேர் மார்க்கெட்டில் ஏதோ முதலீடு செய்து அது பற்றி படித்துக்கொண்டிருக்கிறார். முதலில் பேசும் அனைத்து விஷயங்களையும் ஷேக்ஸ்பியர் பற்றி இணைத்துப் பேசுவார். இப்போது பங்குச்சந்தையோடு இணைத்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றியடைந்தால் அவரது பொறியியல் படித்த மனைவி, குழந்தை ஆகியோர் சென்னை வருவார்கள் என நினைக்கிறேன்.  ஃபாரம் மால் போய் ஜாலியாக சுற்றிவிட்டு வந்தோம். அண்ணன் ஆர்கானிக்காக மாறிவிட்டார். எங்கு சென்றாலும், கல் உப்பு, பனம் கற்கண்டு என வாங்கிக் குவிக்கிறார். நான் மிகச்சில பொருட்களையே வாங்கினேன். தன்மீட்சி - ஜெயமோகன் நூலை படித்தேன். எழுத்து, கருத்தியல், பொது மனநிலை, கல்வி, தொழில், செயலூக்கம் என பல்வேறு விஷயங்களை நூலில் ஜெயமோகன் பேசியிருக்கிறார். அவரது வலைத்தளத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்புதான்

எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

படம்
  அகண்டா - பாலகிருஷ்ணா(NBK) அகண்டா பொயபட்டி ஸ்ரீனு என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை.  கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யா