இடுகைகள்

தன்னம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேகரவீராசாமியின் தன்னம்பிகை கதை! - ச.அன்பரசு

படம்
வீல்சேர் டென்னிஸ்  - சேகர் வீராசாமியின் தன்னம்பிக்கை கதை! - ச . அன்பரசு கடந்த டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடந்த தபேபுயா ஓபன் வீல்சேர் டென்னிஸ் போட்டியின் ஃபைனல் . சேகர் வீராசாமி மற்றும் பாலச்சந்தர் இருவீரர்களுக்குமிடையேயான அனல் பறக்கும் நீயா , நானா ? சர்வீஸ்களால் பார்வையாளர்கள் கண்ணிமைக்கவும் மறந்து போனார்கள் . பாலச்சந்தரின் தவறுகளை பயன்படுத்திக்கொண்ட சேகர் , ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் அநாயசமாக வென்றபோது எழுந்த கரகோஷங்கள் அவரின் ஆயுள் வலிகளையும் ஒரு நிமிடம் மறக்கவைத்தது . டென்னிஸ் கோர்ட் தாண்டிய வலிகளையும் சுமந்துதான் சேகர் தபேபுயா ஓபனில் சொல்லியடித்தார் . பின்னே , அர்ப்பணிப்பான விளையாட்டை விளையாட சேகர் தன் இடது காலையே வெட்ட நேர்ந்ததை விட வேறு வேதனை என்ன வேண்டும் ? தினக்கூலியான சேகரின் தந்தைக்கு , அவரை பள்ளிக்கு பசிக்காமல் சோறிட்டு அனுப்பக்கூட இயலாத வறுமை . வயிற்றை அமைதிபடுத்த பத்து வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும்வேலையில் சேர்ந்தார் சேகர் . அப்போது அவரின் நண்பர் டென்னிஸ்