இடுகைகள்

தட்பவெப்பநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை எளிமையாக புரிந்துகொள்ளலாம்! - காலநிலை மாற்றமும், தட்பவெப்பநிலையும்

படம்
    காலநிலை மாற்றம் பூமி தன்னுடைய 4.54 பில்லியன் ஆண்டு வரலாற்றில் அதனுடைய காலநிலையை மாற்றிக்கொண்டே உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் என சூரியனின் கதிர்வீச்சு, பூமியின் வட்டப்பாதை மாற்றங்கள், விண்கல் மோதுவது என கூறலாம். இதனால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளுக்கு அதிக காலம் தேவை. அதாவது, அதன் பாதிப்புகளை உணர்வதற்கு நமக்கு அதிக காலம் பிடிக்கும். இப்போது அறிவியல் ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள்படி மனிதர்களின் செயல்பாட்டால், காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. மேலும இயற்கையாக நேரும் வேகத்தை விட இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இருநூறு ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், மாசுபாடு, மக்கள்தொகை, காடுகள் அழிப்பு காரணமாக நிலம், கடல், காற்று என பலவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பூமியின் பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு வெளியிடப்ப்படுவதால், பசுமை இல்ல விளைவின் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரித்து வருகிறது. பூமியிலுள்ள அடிப்படை கனிம வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெறுவதோடு அதனால் ஏற்படும் மாசுபாடுகளைக் க

வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது பயிர்கள் அனைத்துமே பாதிக்கப்படும்! - ரேச்சல் பெஸ்னர் கெர்

படம்
  ரேச்சல் பெஸ்னர் கெர்  ஆசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ரேச்சல், கல்விப்பணியோடு சமூக ஆராய்ச்சியாளராக சூழல் மற்றும் உணவு பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.  உணவு பாதுகாப்பில் என்னென்ன மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்? வெப்ப அலைகள் அல்லது வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது, அனைத்து பகுதியில் உள்ள பயிர்களும் பாதிக்கப்படும். இதன் விளைவாக பிற பகுதிகளில் இருந்து கூட உணவை நம்மால் பெறுவது கடினம். ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சிறு தீவுகளில் ஊட்டச்சத்து பாதிப்பு கூட ஏற்படலாம். இதுபற்றி நாங்கள் செய்த சூழல் ஆய்வில், உணவுபாதுகாப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம்.   நீங்கள் ஆப்பிரிக்காவில் செய்த காலநிலை மாற்றசெயல்பாடுகள் என்னென்ன? நான் இருபதாண்டுகளாக மலாவி, தான்ஸானியாவில் வேலை செய்து வருகிறேன். அங்கு விவசாயிகள் பல்வகையான பயிர்களை பயிரிடவும், மண்ணை சோதிக்கவும், இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும் ஊக்கப்படுத்தினேன். இதன்மூலம் உணவுப்பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைவு பிரச்னையை எளிதாக தீர்க்கலாம்.  வெப்பஅலை, இந்தியாவின் விவசாய துறையை எந்தளவு பாதிக்கும்? எங்களது ஆய்

சூழல் சொற்கள்! - அறிய வேண்டிய ஆங்கிலச் சொற்களும், அதன் பொருளும்!

படம்
  பொருள் அறிவோம்! Abrupt Climate change காலநிலையில் உடனடியாக நடைபெறும் மாற்றம் அல்லது விளைவு Adaptation புதிய மாறிவரும் இயற்கை சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வது Adaptive Capacity எதிர்கால காலநிலை மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன். இத்திறன் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தது.  Aerosols வளிமண்டலத்தில் உள்ள சிறு துகள்கள் அல்லது நீர் திவலைகள். இவை சூரிய வெப்பத்தை ஈர்க்கின்றன. எடு.கடல் உப்பு, எரிமலை சாம்பல், தூசி Afforestation காடுகள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை உருவாக்கி வளர்ப்பது https://19january2017snapshot.epa.gov/climatechange/glossary-climate-change-terms_.html