இடுகைகள்

ஐசிடிஎஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!

படம்
           ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது! இந்தியாவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஈட்டித்தரும் வரி வருவாய் அதிகம். மக்கள்நலத்திட்டங்களால் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விவகாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. அண்மையில் ஐசிடிஎஸ் - தமிழ்நாடு அரசு இணைந்து செய்த மருத்துவ ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பாடிமாஸ் இன்டெக்ஸ் என்ற அளவுகோல் மூலம் அங்கன்வாடிகளில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள நகரங்களாக மதுரை - 3,322, திருவண்ணாமலை - 2,369, சேலம் - 2,175, கடலூர் - 2,128, திண்டுக்கல் - 1,917 அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைவாக உள்ள மாநிலங்கள் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை