இடுகைகள்

இங்கிட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய எழுத்தாளர்களை வரவேற்று வாய்ப்பளிக்கும் சுயபதிப்பு வலைத்தளங்கள்! - இங்கிட், வாட்பேட், கிரிட்டிக் சர்க்கிள், பிரதிலிபி

படம்
            இலக்கிய தளத்தை சுயபதிப்பு வலைத்தளங்கள் மாற்றியமைத்துள்ளனவா ?   இன்று ஒருவருக்கு எழுதும் ஆர்வமும் வேக மும் இருந்தால் போதும் . அவர் இலக்கிய சன்னிதானங்களிடம் ஆசி பெற்று நூலை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை . ஏராளமான இணையத்தளங்கள் இதற்கெனவே உருவாகியுள்ளன . பல்வேறு மொழிகளிலும் எழுதும் ஆ்ர்வம் கொண்டவர்கள் இதில் பங்கேற்று எழுதி வருகின்றனர் . நன்றாக எழுதும் திறன் கொண்டவர்களின் நூல்களை புகழ்பெற்ற பதிப்பகங்கள் வாங்கி பதிப்பித்து வருகின்றன . இதற்கு வலைத்தளங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன . அமெரிக்க எழுத்தாளர் அன்னா டாட் இப்படித்தான் எழுத தொடங்கினார் . ஆப்டர் என்ற நாவலை தொடராக வாட் பேட் தளத்தில் எழுத தொடங்கினார் . இந்த நாவல் ஒன் டைரக்ஷன் இசைக்குழுவை அடியொற்றியது . இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் புகழ்பெற்று 1.5 பில்லியன் வாசகர்களின் பார்வையைப் பெற்றது . பிறகு சைமன் ஸ்சஸ்டர் பதிப்பகத்தின் மூலமாக அச்சுப்பிரதியாகி 11 மில்லியன் பிரதிகளும் விற்றுள்ளது . இணையம் இன்று அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை ஒன்றாக இணைத்துள்ளது . அவர்களின் வாசிப்பு பழக்கமும் முன்னேறி இணையத