இடுகைகள்

சென்சார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருநகர வெப்பநிலையை கார்களில் சென்சார் வைத்து கணிக்கலாம்!

படம்
  வெப்ப அலையை கார்களில் பயணம் செய்து கணித்தவர்!  நாட்டின் பெருநகரங்களில் ஏற்படும் பல்வேறு அளவுகளிலான வெப்ப அலை வேறுபாட்டை கணக்கிட சூழல் ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். 1927ஆம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் வில்ஹெம் ஸ்மித் (Wilhelm schmidt), வெப்பம் பற்றிய சோதனையொன்றை செய்தார். இதன்படி தன் காரில் பாதர தெர்மாமீட்டரைப் பொறுத்திக்கொண்டு வியன்னா நாட்டிற்குள் மூன்று மணி நேரம் சுற்றினார். இதில், அவர் நகரங்களின் வெப்பநிலை பற்றிய தகவல்களைப் பெற்றார். இதன்மூலம், அதிக வெப்பம் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன.  பல்லாண்டுகளாக சூழல் ஆராய்ச்சியாளர்கள் வெப்ப அலை பற்றி செய்த ஆய்வு, புல்லட்டின் அமெரிக்கன் மெட்டரோலாஜிகல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது. வில்ஹெமின் ஆய்வுமுறையை மேம்படுத்தி கார்களில் சென்சார் பொறுத்தி இணையத்தில் இணைத்தனர். இதன்மூலம், வெப்பம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்தனர்.  நகர மக்களே , இந்த ஆய்வில் பங்கேற்று தகவல்களை தரமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். நகரங்களில்  குறிப்பிட்ட இடங்கள் மட்டும் வெப்பத்தீவு போல காணப்படுவதை ஆராய்ந்தாலே, மக்களின் வாழ்வை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.  ப

இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் என்பது ஆச்சரியகரமானது! - மார்ட்டின் விக்கெல்ஸ்கி

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் மார்ட்டின் விக்கெல்ஸ்கி விலங்கியலாளர் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் விலங்குகளின் குணங்கள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக மார்ட்டின் விக்கெல்ஸ்கி உள்ளார். இவர் உருவாக்கிய சிந்தனைதான், ஐகாரஸ். இன்டர்நேஷனல் கோ ஆப்பரேஷன் ஃபார் அனிமல் ரிசர்ச் யூசிங் ஸ்பேஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்தை உருவாக்கினார் மார்ட்டின். இப்போதுதான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா விண்வெளி அமைப்புகள் இதற்கு ஆதரவை வழங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டு பிளாக்பேர்ட் பெலாரஸிலிருந்து அல்பேனியாவிற்கு, 1530 கி.மீ. தொலைவுக்கு பயணித்தது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்காணித்தது. இதற்கு காரணம், அதன் உடலில் பொருத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர்தான்.  ஐகாரஸ் திட்டத்தில் நீங்கள் கண்டுபிடித்த விஷயம் என்ன? ஐரோப்பிய ஈல் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, ஐரோப்பிய நாரைகள் 70 சதவீதம் அழிவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்தோம். இதற்காக,  15 ஆயிரம் நாரைகளுக்கு நாங்கள் டேக்குகளை பொருத்த முடிவு செய்தோம். நாரைகள் திடீரென பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவதை நினைத்துப் பாருங்கள். இவை, காடுகளில் இப்படி இறந்துகிடப்பதை யாரும் பார்

சரக்குளை சென்சார் வைத்து கண்காணிக்க முடியும்! - ஒளி மூலம் மின்சாரம் சேமிக்கும் சென்சார்கள்

படம்
  ஒளியைப் பயன்படுத்தும் சென்சார்கள்! அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், மைக் ஃபிட்ஸ்ஜெரால்ட். இவரது நிறுவனத்தின் பெயர், நெட் ஃபீசா ). மைக்கிற்கு ஒரு கனவு உண்டு. கண்டெய்னர்களில் சென்சார்களைப் பொருத்தி, அதுபற்றிய தகவல்களை அனுப்புவர்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதை லட்சியமாக நினைக்கிறார். எதிர்காலத்தில் சென்சார்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என நினைக்கிறார். சமகாலத்திலேயே நிறைய நிறுவனங்கள் அதற்காக முயன்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.  அமேஸான், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சாதனங்கள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், ஸ்மார்ட்வாட்ச் மூலம் நமது உடல்நிலை பற்றியும் கவனத்துடன் இருக்க முடிகிறது.  2035ஆம் ஆண்டுக்குள் சென்சார்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெட் ஃபீசா தயாரிக்கும் சென்சார்கள், அசைவு, ஒளி, வெப்பம் மூலம் ஆற்றலை சேமித்து வைத்து இயங்கக் கூடியவை. இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கார்க்கில் உள்ள டின்டால் தேசிய கழகம் உருவாக்கியுள்ளது. தற்போது சென்சாரை சோதிக்கும் ச

விலங்குகளைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பங்கள்!

படம்
  pixabay விலங்குகளை பின்தொடரும்  தொழில்நுட்பம்!  இன்று நவீன வாழ்க்கையில் உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், இயற்கையைக் காக்கவும் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விலங்குகளின் உடலில் மாட்டும் சிறு ரேடியோ டேக் மூலம் அதன் நடமாட்டத்தை எளிதாக கணிக்கலாம்.  தொழில்நுட்பம் அதிகரித்த அதேயளவு, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. அதனை கவனத்துடன் பாதுகாக்கும் தேவையும் உள்ளது.  காகபோ (kakapo) இன கிளிகளின் மீது டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் 201 கிளிகளும் தொலைவிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  பருந்து (hawk) ஒன்றின் மீது கேமரா, அல்ட்ராசோனிக் மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. இதன் வழியாக வௌவால் திரள்களின் நடமாட்டத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வௌவால்களின் எதிரொலிப்பு திறனை உள்வாங்கி அதனை தானியங்கி கார்களுக்கு பயன்படுத்துவதே அறிவியலாளர்களின் நோக்கம்.  பருந்து, கிளி மட்டுமல்ல சிறு ஆமைக்குட்டிக்கும் கூட நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி அதனைக் கண்காணிக்கும் வசதி வந்துவிட்டது. தொண்ணூறுகளில் ஹவாய் மங் சீல் Hawaiian monk seal) ஒன்றுக்கு கேமரா பொருத்தப்பட்டது. இதில் சென்சார

திரைப்படங்களின் தணிக்கையை கையில் எடுக்கும் மத்திய அரசு! - புதிய சூப்பர் சென்சார் விதிகள் அறிமுகம்

படம்
                        திரைப்படங்களுக்கான புதிய சட்டம் 2021       கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன . இந்த விதிகள் 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன . இதன்படி திரைப்படத் தணிக்கை அமைப்பு படத்தை திரையிடலாம் என குறிப்பிட்ட பிரிவில் படத்தை அனுமதித்தாலும் கூட அதனை திரும்ப சோதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது . இந்த சட்டம் பற்றி பார்ப்போம் . படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள் , காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு சென்சார் அமைப்பு சிலசமயங்களில் சான்றிதழ் தரமுடியாது என்று கூறி திரையிட அனுமதி மறுக்கும் . அந்த சமயங்களில் இதற்கான தலைமை அமைப்பான ட்ரிப்யூனலில் முறையிட்டால் பெரும்பாலும் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கிடைத்துவிடும் . மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பை கலைத்துவிட்டு , இனிமேல் நீதிமன்றங்களே படத்தை திரையிடலாமா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் என்று கூறிவிட்டது . இதனை திரைத்துறையினர் பலரும் இது சாத்தியமாக என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர் . புதிய விதிகள் உருவாக்கப்பட்டு

உலகில் அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும்!

படம்
  மில்லியன் வோல்ட் மின்சாரம்! உலகிலேயே அதிகளவு மின்சாரத்தை எங்கு தயாரிக்கலாம்? நீரில், காற்றில், சூரிய ஒளி  என்கிறீர்களா?. இப்பதில்களை ரப்பர் கொண்டு அழியுங்கள். மின்னல் மூலம்தான் அதிகளவு மின்சாரத்தை நாம் பெற முடியும்.  ஜேம்ஸ் ஃபிராங்கிளினுக்கும் கூட இது தெரியும். ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை மின்னலிலிருந்து பெறும் ஆற்றலை அளவிட முயற்சித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக சென்சார்களை வைத்து முயன்றும் கூட மின்னல்களை சரியான முறையில் கவனிக்க முடியவில்லை.  ஊட்டியில் ஆராய்ச்சியாளர்கள் செய்த புதிய ஆய்வு குறித்த செய்தி பிஸிகல் ரிவ்யூ லெட்டர்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு டிச.1 அன்று ஊட்டியில் நடந்த இடிமின்னல்கள் அளவிடப்பட்டன. பதினெட்டு நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் 1.3 ஜிகாவோல்ட்ஸ் மின்சாரம் கடத்தப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை விட பத்து மடங்கு அதிக அளவு ஆகும்.  ”இதையொட்டியே மழைமேகங்கள் ஆபத்தானவை என்கிறோம். இதில் வெளிப்படும் வெப்பத்தை நீங்கள் எதில் வெளியேற்றினாலும் அது பேரழிவாக மாறும் ” என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி மைய

வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

படம்
              காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இரு

எந்த வயதினர் படங்களை பார்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு கூட இல்லை! - வாணி திரிபாதி

படம்
                வாணி திரிபாதி திக்கூ திரைப்பட சான்றிதழ் குழு திரைப்படத்துறை தொடர்பான கொள்கை வகுப்பதற்கான ஐடியா எப்படி உருவானது ? திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது அதைச்சார்ந்த விஷயங்கள் பற்றி சேகர் கபூர் என்னிடம் பேசினார் . அதற்குப்பிறகுதான் எனக்கு இதைப்பற்றி கொள்கை வகுப்பது பற்றிய எண்ணம் தோன்றியது . பொதுமுடக்க காலத்தில் மக்கள் இணையம் சார்ந்து ஓடிடி நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினர் . இது பொழுதுபோக்குதுறையை மாற்றியுள்ளது . இவையன்றி விளையாட்டு துறை மற்றும் ஏஐ சார்ந்த விஷயங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர் . நாங்கள் இக்காலகட்டத்தில் இதுபற்றி நிறையமுறை பேசி அதுபற்றிய கொள்கைகளை எழுதி உருவாக்கினோம் . இப்போதுள்ள காலகட்டம் டிஜிட்டல் நிகழ்ச்சிகளுக்கு சரியானது . மத்திய அரசு டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது . நீங்கள் அதில் படைப்பு சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறீர்கள் ? நாம் இங்கு பார்த்து வரும் பல்வேறு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இன்னும் முறைப்படுத்தவில்லை . பலரும் போதைப்பொருட்கள் , நிர்வாண காட்சிகள் , மோசமான கெட

ஸ்நாப்சாட் படங்கள் முழுவதாக அழிவதில்லையா? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி தகவல்களை வயர்களின்றி பகிரும் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூம் என்று பெயர் வந்தது எப்படி? டென்மார்க் மன்னர் ஹெரால்டு பிலாடண்ட், முன்னர் டென்மார்க்கையும் நார்வேயையும் வன்முறையின்றி இணைத்தார். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிடும் விதமாக ப்ளூடூத் என்று பெயரிட்டனர். நோர்ஸ் எழுத்துவடிவில் பிலாடண்ட் என்பதை சுருக்கி பி என எழுதியிருப்பார்கள். ஸ்நாப்சாட் புகைப்படங்களை நீங்கள் பார்த்தபிறகு என்னாகிறது தெரியுமா? ஸ்நாப்சாட் நிறுவனம் அவற்றை அழித்து விடுவதாக கூறுகிறது. அதன் சர்வர்களிலிருந்து நீக்கிவிடுவதாக கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை. உங்கள் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை திரும்ப மீட்க முடியும். மின் கோப்புகளை அழிக்கும்போது அவை அழிந்துபோனது போல தோன்றினாலும், அவற்றை திரும்ப பெறமுடியும். அதாவது அவை நம் பார்வைக்குத் தெரியாது. திரும்ப அவற்றை பயன்படுத்தும் வரை போனிலுள்ள நினைவகத்தில் இருக்கும். ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி வேலை செய்கிறது? அனைத்து பேட்டரிகளுக்கும் அடிப்படை மூன்றுதான். அனோடு, கேத்தோடு, அமிலம். இவற்றுக்கு இட

2019ஆம் ஆண்டின் ஸ்மார்ட் நகரங்கள் இவைதான்.

படம்
ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பிரதமர் மோடி திட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கு வர பல்லாண்டுகள் ஆகும். அதற்கான நிதித்தேவை அதிகமாக உள்ளது. இப்போது உலகில் உள்ள ஸ்மார்ட் நகரங்களை நாம் பார்ப்போம். அடிஸ் அபாபா, எத்தியோப்பியா எத்தியோப்பிய தலைநகரில் எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் மக்களுக்கான போக்குவரத்தாக ட்ராம்களை அரசு உருவாக்கியது. இதன் விளைவாக, சிறந்த வண்டி நிறுத்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக நாடெங்கும் செல்ல சிறப்பான போக்குவரத்து சேவைகளை உருவாக்கியுள்ளனர். ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து உலகையே கொள்ளையடித்து செழிப்பான டச்சு நாடு.  இவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பது அமெரிக்கா பணக்கார நாடு என்று சொல்வதைப் போலத்தான். 2009ஆம்ஆண்டு 150 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்கினார்கள். அதில் ஏராளமான தொழில் முதலீடுகளும் செய்துள்ளனர். பெரும்பாலும் இங்கு கார், பைக்குகளைவிட சைக்கிள்களையே பெரும்பாலும் போக்குரவத்திற்கு பயன்படுத்துகின்றனர். அதாவது குறைந்த தூர போக்குவரத்திற்காக... அதிக தூரம் என்றால் ரயிலில் ஏறிவிடுவார்கள். ஸ்பெ

காணாமல் போன சீன பதிப்பாளர்

படம்
மைட்டி கரண்ட் என்ற பதிப்பக நிறுவனத்தைச் சேர்ந்தவரை சிறையிலிருந்து மீட்க ஸ்வீடன் தூதர் முயன்றார். இதன் விளைவாக அவரை சீனா ஸ்வீடனுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. காணாமல் போன பதிப்பாளர் குய் மின்காயின் மகள் கொடுத்த புகாரின்படி, சீன அரசு ஸ்வீடன் தூதர் அன்னா லின்ட்ஸ்டெட்டை ஸ்டாக்ஹோமுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. தந்தையைப் பார்ப்பதற்கு உதவுவதாக குய் மின்காயின் மகளுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் அன்னா. சந்திப்பு சீன பணக்காரர் ஒருவருடன் நிகழ்ந்திருக்கிறது. இச்சந்திப்பு குறித்து குய் மின்காயின் மகள் கொடுத்த புகார்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்கான தூதர் என்ற பெயரில் சீனாவுக்கு தூதராக வந்தவர் அன்னா. ”லஞ்சம் , துன்புறுத்தல் இவை எதுவும் என் தந்தையை காப்பாற்ற போவதில்லை” என்பவர் இது குறித்து மீடியம் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில் இவரை ச் சந்தித்த பணக்காரர் குறித்தும் விவரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சாலை விபத்து சம்பந்தமாக சீன அரசு குய் மின்காயை கைது செயதது. பின்னர் அவரை சீன அரசு பற்றி வெளிநாடுகளுக்கு தெரிவித்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைத்தனர். குய