சரக்குளை சென்சார் வைத்து கண்காணிக்க முடியும்! - ஒளி மூலம் மின்சாரம் சேமிக்கும் சென்சார்கள்
ஒளியைப் பயன்படுத்தும் சென்சார்கள்!
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், மைக் ஃபிட்ஸ்ஜெரால்ட். இவரது நிறுவனத்தின் பெயர், நெட் ஃபீசா
). மைக்கிற்கு ஒரு கனவு உண்டு. கண்டெய்னர்களில் சென்சார்களைப் பொருத்தி, அதுபற்றிய தகவல்களை அனுப்புவர்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதை லட்சியமாக நினைக்கிறார். எதிர்காலத்தில் சென்சார்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என நினைக்கிறார். சமகாலத்திலேயே நிறைய நிறுவனங்கள் அதற்காக முயன்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.
அமேஸான், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சாதனங்கள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், ஸ்மார்ட்வாட்ச் மூலம் நமது உடல்நிலை பற்றியும் கவனத்துடன் இருக்க முடிகிறது.
2035ஆம் ஆண்டுக்குள் சென்சார்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெட் ஃபீசா தயாரிக்கும் சென்சார்கள், அசைவு, ஒளி, வெப்பம் மூலம் ஆற்றலை சேமித்து வைத்து இயங்கக் கூடியவை. இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கார்க்கில் உள்ள டின்டால் தேசிய கழகம் உருவாக்கியுள்ளது. தற்போது சென்சாரை சோதிக்கும் சோதனைகள் தொடங்கியுள்ளன.
ஜெர்மனியில் இயங்கும் வரும் நிறுவனம் என்ஓசன் (Enocean), ஒளியில் இயங்கும் சென்சார் ஒன்றைத் தயாரித்துள்ளது. இது ஒளியைப் பெற்று இயங்கி, அறையின் வெளிச்சம், காற்று, நுண்ணுயிரிகள் பற்றிய தகவல்களையும் பயனருக்கு வழங்குகிறது. இதில் போட்டோவால்டாய்க் சென்சார் பயன்படுகிறது. சென்சார் மூலம் சேகரிக்கப்படும் தகவல், சென்சாரின் திறனை மேலும் அதிகரிக்க உதவலாம். தற்போது ஒளியைப் பயன்படுத்தி செயல்படும் சென்சார்கள், தொழிற்சாலை, அலுவலகம் ஆகியவற்றில் செயல்படும் நிலையில்தான் உள்ளது.
ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஏபிபி. இந்த நிறுவனம் உணவுத்துறையில் ஓவன்களின் வெப்பத்தைக் கணிப்பதற்கான சென்சார்களை உருவாக்கி வருகிறது. இங்கிலாந்தில் பெர்பெட்டும் (Perpetuum) என்ற நிறுவனத்தின் சென்சார்கள், வெப்பம் அழுத்தத்தில் (Piezoelectricity) செயல்படுபவை. இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் ரயில்போக்குவரத்தில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய நிறுவனங்கள் மூலம் தூய ஆற்றல் சாதனங்கள் அதிகம் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.
Scavenger hunt
https://nodon.fr/en/nodon/enocean-temperature-humidity-sensor/
கருத்துகள்
கருத்துரையிடுக