வளர்ந்த நாடுகள் தான் மாசுபடுதலுக்கு முழுப்பொறுப்பு - மாதவன் ராஜீவன், முன்னாள் செயலர், புவி அறிவியல் துறை

 









மாதவன் ராஜீவன்

முன்னாள் செயலர், புவி அறிவியல் 

உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணம் என்ன?

காலநிலை மாற்றம்தான் உலக நாடுகள் முழுவதும் வெப்பம் அதிகரிக்க முக்கியமான காரணம். இதன் விளைவாக வெப்ப அலைகள் உருவாகின்றன. மழைப்பொழிவு அதிகரிக்கிறது. வெள்ளப்பெருக்கு சொத்துகளை நாசமாக்குகிறது. மனிதர்களின் தலையீடு காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் தீவிரமாக்குகிறது. 

வெப்பமண்டல நாடுகளில் கூட காலநிலை மாற்ற விளைவுகள் குறையவில்லை. நாம் எப்படி இதற்கான தீர்வைக் கண்டறிவது?

தீவிரமான காலநிலை வேறுபாடுகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் இருக்க வேண்டுமென்பதுதான் காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் கூறுவது. அதற்கு நாம் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவையே உலகளவில் அதிக மாசுபாடுகளை உருவாக்குகின்றன. 

வளரும் நாடுகள் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா?

வளர்ந்த பணக்கார நாடுகள் மாசுபாடு பற்றிய பிரச்னையில் முக்கியமான முடிவை எடுக்கவேண்டும். உலகளவில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் என உயரும்போது நாம் மோசமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். 

மனிதர்களின் செயல்பாடுகள்தான் காலநிலை மாற்ற பாதிப்பிற்கு முக்கியக் காரணமா?

இந்தியா மற்றும் உலக நாடுகளில் காலநிலை மாற்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மனிதர்களின் செயல்பாடுகள் முக்கியமான காரணமாகும். 2003ஆம் ஆண்டு ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டது. பிறகு தற்போது இந்தியா, பாகிஸ்தானில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

வெப்ப  அலைகளை எதிர்கொள்வது எப்படி?

வெப்ப அலைகள் நமது உடல்நிலை, வேளாண்மை, நீர் ஆதாரங்கள், மின்சார மேலாண்மை, காற்று தரம் ஆகியவற்றை பாதிக்க கூடியது. வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் நாம் கொள்கைகளை வகுப்பது அவசியம். கலாசார ரீதியாக, அமைப்பு ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக நாம் நிறைய விஷயங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். பொதுமக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை தர வேண்டும். இதன்மூலம் வேளாண்மையில் பயிர் சேதத்தைத் தவிர்க்கலாம். இந்திய மாநிலங்களில் சில மட்டும் காலநிலை மாற்றத்திற்கேற்ப திட்டங்களை வகுத்துள்ளன. 


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரிச்சா சர்மா 









கருத்துகள்