இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

 










நேர்காணல்
நிதின் சேகர்
இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர்



காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா?

நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி. 

திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம். 

காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா?

மேற்கு வங்கத்திலுள்ள பக்சா கிராமத்தில் நான் டில்லி, அமெரிக்காவிலுள்ள நகரங்களில் வாழ்வது போலவே வாழ்ந்தேன். சுத்தமான காற்று, போக்குவரத்து நெரிசல் இல்லை என நிறைய சாதகமான அம்சங்களைக் கூறலாம். வெளியிலிருந்து வரும் என்போன்றவர்களுக்கு உள்ளூர் மனிதர்கள் வழிகாட்டி உதவினார்கள். 

இயற்கைச்சூழல் பாதுகாப்பு பற்றிய எந்த மூடநம்பிக்கையை உடைக்க விரும்புகிறீர்கள்?

இயற்கைச் சூழல் பாதுகாப்பு என்பது அனைத்து விலங்குகளுக்குமானது. குறிப்பிட்ட சில விலங்குகளுக்கு மட்டுமல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அனைத்து உயிரினங்களும் சூழலை சமநிலையில் உயிர்ப்போடு வைத்திருக்க தேவை. 

சூழலைக் காக்க நாம் எதில்  கவனம் செலுத்தவேண்டும்?

காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு, சூழல் பாதுகாப்பு ஏற்பாடுபடி பயன் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டால் போதுமானது. அவர்களே காடுகளை சிறப்பாக பாதுகாப்பார்கள். வனத்துறை அதிகாரிகளை விட சிறப்பான முறையில் பழங்குடி மக்கள் காடுகளை பாதுகாக்க முடியும். காடுகளுக்கு சுற்றுலா வருபவர்களை வரவேற்று, காடுகளைச் சுற்றி வாழும் மக்களை காட்டு பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பதும் நியாயம் அல்ல. 


Mid day

10.4.2022

Playing catch with an elephant (tara khandelwal)

https://www
.com/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்