இந்திய குகைகளிலுள்ள ரகசியங்களை சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்!

 









இந்திய குகைகளிலுள்ள ரகசியங்கள்!





இந்தியாவில் உள்ள குகைகள் பல்வேறு ரகசியங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன.  ஆயிரக்கணக்கிலான நுண்ணுயிரிகள் வாழும் குகைகளில்,  குறைவான ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளன. தற்போது குகைகளையும், அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். 

குகைளை ஆய்வு செய்யும் துறைக்கு, ஸ்பீலியோலஜி (Speleology) என்றுபெயர். இந்தியாவில் 9  ஆராய்ச்சியாளர்கள்  ஒன்றாக இணைந்து குகைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களை உயிரியல் ஆராய்ச்சியாளர் *************** வழிநடத்துகிறார். ********* தமிழ்நாட்டிலுள்ள ********பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில்  உயிரியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் அனைவரும் இணைந்துதான் குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், ஸ்பீலியோலஜி சங்கத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளனர். 

மேகாலயா, அந்தமான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள குகைகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குகைகளில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துமே காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. ”ஏரி அல்லது ஆற்று மீன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது எளிது. ஆனால் குகைகளை கண்டுபிடித்து, அதில் வாழும் உயிரினங்களை ஆய்வு செய்வது கடினமான பணி. இதற்கு அதிகளவு நிதி தேவைப்படுகிறது.” என்றார்  கேரள பல்கலைக்கழகத்தின் மீன் மற்றும் கடல் ஆய்வுத்துறை பேராசிரியரான ராஜீவ் ராகவன்.

குகை மீன் இனம் சீனா, மெக்ஸிகோ, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. இவற்றை ஆவணப்படுத்தும் பணி இந்தியாவில் தொடக்கநிலையில் தான் உள்ளது. . 1992ஆம் ஆண்டு தொடங்கி மேகாலயாவில் குகைகளை ஆய்வு செய்து தகவல்களை அட்டவணைப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த ஆய்வில் இந்திய, ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 519 கி.மீ. தூர குகைப்பரப்பை ஆய்வு செய்துள்ளனர்.   

மேகாலயாவில்,  குகை ஆய்வுக்கெனவே 1992ஆம்  ஆண்டு தொடங்கி மேகாலயா அட்வென்ச்சர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் துணை நிறுவனரான பிரையன் டாலி, 1700க்கும் அதிகமாக குகைகளை அடையாளம் கண்டிருக்கிறார். அவற்றில் ஆயிரம் குகைகளை வரைபடமாக்கியிருக்கிறார்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் டாலி,  ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டேனியல் ஹாரிஸ் என்ற உயிரியலாளருடன் சேர்ந்து பணியாற்றினார்.  ஜெயின்டியா மலைப்பகுதியில், கண்பார்வை இல்லாத மீன் இனத்தைக் கண்டறிந்தார். மேற்கொண்டு பல்வேறு வித ஆய்வுகளை குகையில் செய்யும்போது பல்வேறு அறிவியல் செய்திகள் , கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 


secrets of the caves (avantika bhuyan)

mint chennai 4.6.2022

https://www.sacon.in/division/conservation-ecology/

https://nenow.in/north-east-news/meghalaya-mining-tragedy-averted-says-caver-kharpran-daly.html

கோவை ஆனைக்கட்டியிலுள்ள ************** ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ***************** மற்றும் அவரது வழிகாட்டி ஆகிய இருவரும் தங்களைப் பற்றி தவறான செய்தியை  நான் வெளியிட்டதாக போனில் அழைத்து புகார் சொன்னார். பிறகு தொடர்புடைய ஆராய்ச்சியாளர், தனது மின்னஞ்சலில் அவரது வாழ்க்கை இதனால் பெரும் இடர்ப்பாட்டிற்கு உள்ளாகும் என அவரது வழிகாட்டி சொன்னதையே வழிமொழிந்தார். எனவே, அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு மூலம் அவரது ஆராய்ச்சி இந்தியாவில் உயிர்பிழைத்து ஆங்கில நாளிதழ்களில் மட்டும் வாழ்ந்து, அவரது பெருமை தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது.  வேறுவழியே இல்லை. நானும் அதை ஏற்கிறேன். 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்