டாப்ளர் ரேடாரின் பயன் என்ன? - மிஸ்டர் ரோனி
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தேசிய தட்பவெப்பநிலை சேவை தொடங்கப்பட்டது? 1870ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 அன்று தொடங்கப்பட்டது. உலிசஸ் எஸ் கிராண்ட் அதிபராக இருந்தார். தேசிய தட்பவெப்பநிலை பிரியூ என்று பெயர் சூட்டப்பட்டது. 1891ஆம்ஆண்டு அதன் பெயர் மாற்றியமைக்கப்பட்டது. அமெரிக்க தட்பவெப்பநிலை அமைப்பு என்று சூட்டப்பட்ட பெயர், 1967ஆம் ஆண்டு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. க்ளீவ்லேண்ட் அப்பே என்பவர் யார்? இவரைத்தான் தட்பவெப்பநிலை அமைப்பை நிறுவிய தந்தை என்று பெருமையோடு கூறுகிறார்கள். 1868ஆம்ஆண்டு சின்சினாட்டி கோளரங்கத்தில் இயக்குநராக இருந்தார். அதில் இருந்தபடியே தட்பவெப்பநிலை பற்றிய தகவல்களை திரட்டி எழுதினார். 1871ஆம் ஆண்டு, தேசிய தட்பவெப்பநிலை பிரியூவுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். தட்பவெப்பநிலை துறையில் பெஞ்சமின் பிராங்களின் பங்களிப்பு என்ன? புயலில் பட்டம் விடும்போது அதன் வழியாக மின்சாரம் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தார். புயல்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடிகார சுற்று முறையில் செல்வதை ஆய்வு செய்து கண்டறிந்தார். அவர் ஆய்வு செய்தபோது, பிலடெல்பியாவிலிருந்த...