இடுகைகள்

அரசு உதவி பெறும் பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்