இடுகைகள்

கெட்ச்அப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாம், ஊறுகாய், கெட்ச்அப் தயாரிப்புகள் தூய்மையானவைதானா? - தூயவை போன்ற வேடமே விற்பனையை அதிகரிக்கும்

படம்
  ஒரு பொருள் சுத்தமாக கைபடாமல் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? அந்த பொருளின் மேல் அலுமினிய பாயில், ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, தயாரிக்கும் இடத்தில் கூட கைபடவில்லை. இலையின் மீதுள்ள பனித்துளி போல பரிசுத்தமானது. அம்மாவின் அன்பைப் போன்றது என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இப்படித்தான் ஊறுகாய், பீநட் பட்டர், ஜாம் ஏன் இப்போது டீத்தூளுக்குக் கூட மணம் வெளியே கசியாமல் இருக்க அலுமினிய பாயில் சீல் ஒன்றை ஒட்டுகிறார்கள். இப்படி சீல் செய்யப்பட்டிருந்தால் வாங்குங்கள். சீல் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள் என்றெல்லாம் பொருளின் மீது எழுதியிருப்பார்கள். ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதான சங்கதி கிடையாது. எதற்கு இந்த முயற்சி? இதெல்லாம் ஓசிடி வந்தவர்களாக சுத்தம் பற்றி கவலைப்படும் ஒரு பிரிவினரகளுக்காகத்தான். இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். நறுவிசமாக உடுத்துவார்கள்.   இவர்களிடம் நிறைந்து வழியும் பணத்தை பிடுங்கவே இத்தனை மெனக்கெட்டு பொருட்களுக்கு சீல் குத்துகிறார்கள். இதெல்லாம் மனதளவில் ஒரு பொருள் சுத்தமாக இருக்கிறது. கைபடாதபொருள் என நிரூபித்துக் காட்டுவதற்குத்தான். மற்றபடி, அந்த பொருள் அ

உண்மையா? உடான்ஸா? - கெட்ச் அப்பை மருந்தாக பயன்படுத்தலாமா?

படம்
கெட்ச்அப்பை மருந்தாக பயன்படுத்தலாம்! உண்மையல்ல. தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் இப்படி பயன்படுத்தினார்கள். 1830களில் உடலில் ஏற்பட்ட மஞ்சள் காமாலை, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தினர். தக்காளி கெட்ச்அப்பை இப்படி மருந்தாக நோயாளிகளுக்கு பரிந்துரைத்த மருத்துவரின் பெயர், ஜான் குக் பென்னட். இதை பலரும் காப்பியடித்து  சர்வரோக நிவாரணி தக்காளி கெட்ச்அப்தான்  என்று சொல்லி விற்றனர். பின்னாளில், கெட்ச்அப் நோய் தீர்ப்பது இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. இதன் விளைவாக,  1850இல் கெட்ச்அப் மருந்து விற்பனை என்பதே முற்றாக நின்றுபோனது.  உலகின் பழமையான சக்கரத்தின் வயது 5 ஆயிரம் ஆண்டுகள்! உண்மை. ஸ்லோவேனியாவில் உள்ள  லுப்லியானா (Ljubljana) நகர் அருகே பழமையான சக்கரம் கண்டறியப்பட்டது. தற்போது இச்சக்கரம், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் வயது 5,100 முதல் 5,350 வரை இருக்கலாம் என்று கார்பன் வயது கணிப்பு முறையில் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் சூடானில் அதிகளவு பிரமிடுகள் உள்ளன!  உண்மை. தற்போது வரை அங்கு 255 பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்தில் 138 பிரமிடுகள் ஆ