உலகிற்கு சிந்தனையால் வழிகாட்டும் சீன செவ்வியல் சிந்தனையாளர்களின் கருத்துகள்!
ஷி ச்சின்பிங் - ஹவ் டு ரீட் கன்பூசியஸ் அண்ட் அதர் கிளாசிக் திங்கர்ஸ் ஸான் பாங்சி சிஎன் டைம்ஸ் புக்ஸ் 2013 - 2014 என இரண்டு ஆண்டுகளில் சீன அதிபர் உள்நாடு, வெளிநாடுகளில் பல நூறு பேச்சுகளை பேசியுள்ளார். அப்படி பேசியுள்ளதில் சீன இலக்கிய எடுத்துக்காட்டுகள் அதிகம் இருந்தன. இருநூறுக்கும் மேற்பட்ட சீன பழமொழிகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஷி எங்கே, எப்படி, என்ன பொருளில் சொன்னார் என நூலாசிரியர் விவரித்துக் கூறியிருக்கிறார். நூலில் உள்ள மேற்கோள்கள் கல்வி, அரசு, அரசியல் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து வரை மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கோள்களை கூறிவிட்டு அதை அதிபர் ஷி எப்படி பயன்படுத்தினார், என்ன பொருளில் என விளக்கிவிட்டு விரிவான விளக்கத்திற்கு செல்கிறார்கள். இப்பாதையில் நாம் பழமொழியை, கருத்தை சொன்னவர் பெயர், அவரது தகவல்களை சுருக்கமாக அறிய முயல்கிறது. அறிவுக்கூர்மை எளிதாக மரணத்தை கையோடு கூட்டி வரும் என்பதுபோல, பெரும்பாலான சீன சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் தாம் சொன்ன கருத்துக்காக செயல்பாட்டிற்காக சிறைவாசம் அனுபவித்து பிறகு, தூக்...