தலைவனாக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் உருவாவது அவசியம்!
அரசியல் விழிப்புணர்வு தேவை இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற முடியாது போனதற்கு காரணம் சரியான நபரை முக்கியமான வேலைகளுக்கு தேர்ந்தெடுக்க முடியாத நுட்பமில்லாத தன்மையே காரணம். குறிப்பாக அரசியல் தளத்தில். ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? அரசியல்வாதி ஒருவரின் மகனை அடுத்த தலைவர் என்று ஏன் சமாதானம் செய்துகொள்கிறோம்? இதற்கு காரணமாக மூன்று சிக்கல்களைக் கூறலாம். ஒன்று, உணர்ச்சிரீதியாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது. ஒரே மாதிரியான எப்போதும்போலான மன்னிப்புகளைக் கேட்பது. ஆனால் இந்திய மக்கள் பெரிதும் உணர்ச்சிகரமானவர்கள். இதற்கு நமது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த இயல்பே பொதுப்பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, முன்வருகிறது. எனவே, இதன் முடிவுகள் எப்போதும் நியாயமானதாக, பகுத்தறிவுக்குரியதாக இருப்பதில்லை. நாம் பிக் பி யோடு உணர்வுபூர்வமாக இணைந்துள்ளதால், ஜூனியர் பிக்கும் வாய்ப்பினை அளிக்கிறோம். சினிமா என்ற வகையில் இதுபோன்ற முடிவுகள் மக்கள் வாழ்க்கையி்ல பெரிய வித்தியா...