இடுகைகள்

வல்லபாய் படேல் சிலை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படேல் தேசத்தில் என்ன நடக்கிறது?

படம்
படேல் தேசம் உடைகிறது! இந்தியாவின் ஒற்றுமைக்கு  உதாரணம் என குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்திய அரசு கூவிவரும்போது. அங்கிருந்து பீகார் உத்தரபிரதேச தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். சர்தார் சரோவர் அணையில் உருவாகியுள்ள சிலையின் மதிப்பு 2 ஆயிரத்து 900 கோடி. இதன் தொடக்கவிழாவின் போது, ஹர்திக் படேல் தொடங்கவிருக்கும் கிசான் சத்தியாகிரகமும் நடைபெறவிருக்கிறது. குஜராத்தில் படேலின் சிலையை செய்வதிலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு உண்டு. மாநிலத்தின் பொருளாதாரத்திலும் 4 மில்லியன் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளது. குஜராத்தின் 5 தாலுக்காக்களில் வறுமை தாண்டவமாடுகிறது. நர்மதா பகுதியில் மக்கள் நீர்தட்டுப்பாட்டால் நாயாய் அலைந்து வரும் இடங்களில்தான் 430 மில்லியன் டாலர் செலவில் இந்தியாவின் ஒற்றுமையை புகைப்படங்களில் பதிவு செய்ய படேல் சிலை உருவாகியுள்ளது. குஜராத்தில் நடந்த சிறுமி கற்பழிப்பு விவகாரத்தால் பீகார், உ.பி தொழிலாளர்கள் அனைவரும் போலீசாரின் வற்புறுத்தல் மற்றும் தாக்குதல் பயத்தால் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். படேல் சிலை செய்ய ஒப்பந்தமான 4500 பேரில் பாதிப்