இடுகைகள்

விஷமுறிவு மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

படம்
   பச்சை விரியனின் விஷத் தாக்குதல்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலின் செல்களைத் த

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 2021 - மார்ச் 2022