இடுகைகள்

ஃபெம்மே ஃபர்ஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

படம்
  ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர் உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை.  ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.  கங