இடுகைகள்

பிரின்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்டம் தாண்டி காதலியைத் தேடி அடையும் இளைஞனை தடுக்கும் சொந்த ஊர் மக்கள்! பிரின்ஸ் - அனுதீப்

படம்
  பிரின்ஸ்  சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் இயக்கம் - அனுதீப் இசை தமன் தீபாவளிக்கு வந்த படம். போட்டியிட்ட சர்தார் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. மிகப்பெரும் வெற்றியா என்று கேட்டால் அதையும் உறுதியாக கூற முடியாது. இந்த வகையில் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடேவைக் கூறுகிறார்கள்.  உலகநாதன் (சத்யராஜ்), அரசு வேலை செய்துவிட்டு பணி ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருக்கிறார். ஊருக்கு பெரிய மனிதராக காட்டிக்கொள்ள நினைப்பவர், குடியரசு தினம், சுதந்திர தினம் என அனைத்து நிக்ழச்சிகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் மரியாதையைப் பெற்று வருகிறார். இதை இவருக்கு கொடுத்து தனக்கு தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த நில உரிமையாளர் பூபதி. கண்ணில்படும் நிலங்களையெல்லாம் காசு கொடுத்து சில சமயம் கொடுக்காமல் வாங்கிக் கொண்டு இருக்கிறார். இதுதான் கதையா என்றால் கதையில் இதுவும் ஒரு பகுதி.  முக்கியமான கதை என்றால், ஊரில் உள்ள பள்ளியில்தான் நடைபெறுகிறது. அங்கு உலகநாதன் மகனான அன்பு சமூக அறிவியல் ஆசிரியராக வேலை செய்கிறார். அவருக்கு வேலையில் பெரிய ஈடுபாடு கிடையாது. பள்ளிக்கு போவதைவிட சினிமா தியேட்டருக்கு போவதில்