இடுகைகள்

தொழில்வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன மொழியைப் பரப்பும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வயது 20

படம்
      சீன மொழியைப் பரப்பும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வயது 20 உலகில் உள்ள நூறு நாடுகளில் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் புதிதாக பத்து கிளைகள் பெலாரஸ்,. ரஷ்யா, கிரிபட்டி,லெசேதோ, மலேசியா, மெக்சிகோ, நிகரகுவா, ஸ்பெயின், ஹங்கேரி, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அமைக்கப்படவுள்ளன. உலகளவில் சீன மொழி, கலாசாரத்தை பரப்புவதற்கான உருவாக்கப்பட்டவையே கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுகள். இதன் வழியாக, சீனமொழியை கற்க விரும்புபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பாக பணியாற்றி பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருபவர்களுக்கு சீன அரசின் கல்வித்துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டன. இப்படியான வழங்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 159. பத்தாண்டுகளுக்கு மேலாக கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி வரும் இயக்குநர்களின் எண்ணிக்கை 33. 2004ஆம் ஆண்டில் தாஷ்கண்டில் நிறுவப்பட்டதே முதல் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட். தொடக்கத்தில் இதன் மாணவர்களின் எண்ணிக்கை இருநூறு. இப்போது ஊழியர்களின் கடினமான உழைப்பால் எண்ணூறாக மாறியுள்ளது. ...

காடுகள் சட்டத்தில் மாறும் விதிகள்!

படம்
  வனவிலங்கு மேலாண்மையில் புதிய சீர்திருத்தம்! இந்தியாவில் வன விலங்குகளையும், அவை வாழும் காடுகளையும் பாதுகாக்க வனப்பாதுகாப்பு சட்டம் உள்ளது. 1972ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போதுவரை இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.   2021ஆம் ஆண்டு மத்திய அரசு, வனப் பாதுகாப்பு சட்டத்தில் சில மாறுதல்களை செய்துள்ளது. இதில், விளைநிலங்களுக்குள் வரும் விலங்குகளை வேட்டையாடுவது குற்றமல்ல என்ற ஷரத்து இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  மேற்குலக நாடுகளில் விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமங்களை அரசு வழங்குவது, வருவாய்க்கான முக்கிய வழி. “பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசியப் பூங்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடுவது  விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க உதவும்” என ட்ரூ கன்சர்வேசன் அலையன்ஸ்(TCA) என்ற அமைப்பு கூறியுள்ளது. மேலும், வனப்பாதுகாப்பு சட்டம்...