காடுகள் சட்டத்தில் மாறும் விதிகள்!

 














வனவிலங்கு மேலாண்மையில் புதிய சீர்திருத்தம்!

இந்தியாவில் வன விலங்குகளையும், அவை வாழும் காடுகளையும் பாதுகாக்க வனப்பாதுகாப்பு சட்டம் உள்ளது. 1972ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போதுவரை இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 

 2021ஆம் ஆண்டு மத்திய அரசு, வனப் பாதுகாப்பு சட்டத்தில் சில மாறுதல்களை செய்துள்ளது. இதில், விளைநிலங்களுக்குள் வரும் விலங்குகளை வேட்டையாடுவது குற்றமல்ல என்ற ஷரத்து இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 

மேற்குலக நாடுகளில் விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமங்களை அரசு வழங்குவது, வருவாய்க்கான முக்கிய வழி. “பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசியப் பூங்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடுவது  விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க உதவும்” என ட்ரூ கன்சர்வேசன் அலையன்ஸ்(TCA) என்ற அமைப்பு கூறியுள்ளது. மேலும், வனப்பாதுகாப்பு சட்டம் என்பதை வன ஆதாரங்கள் மேலாண்மை சட்டம் என மாற்றவும் கோரியுள்ளது. இதன்மூலம் விலங்குகளை தனியார் நிதியுதவி பெற்று நிர்வகிக்க முடியும் என கருதுகிறது. 

பாகிஸ்தானில்  மார்க்கோர் (markhor) என்ற பெயரில் விலங்குகளை வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி, வேட்டையாடுவதற்கான உரிமைகள் குறைந்தளவில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஏழரை லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தின் பயனை மக்களே அனுபவிக்கிறார்கள். இந்தியாவில் விலங்குகளை வேட்டையாடும் வனப்பாதுகாப்பு கொள்கை ஷரத்தை பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரித்துள்ளன. 

விவசாயிகளின் பயிர்களை காட்டுப்பன்றி, குரங்கு, நீலப்பசு ஆகியவை மேய்ந்து நாசம் செய்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேட்டையாடுதல் உதவும் என விவசாயிகள் நம்புகின்றனர். பீகார், இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயத்தை அழிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்கான சட்டத்தை ஏற்றுள்ளனர்.  

”விலங்குகளை வேட்டையாடுவதில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் நிலப்பரப்பு அளவில் வேறுபட்டவை. இந்தியாவில் 3 சதவீத பரப்பு மட்டுமே வனவிலங்கு பாதுகாப்புக்கு உள்ளது. வேட்டை வருமானத்தை வைத்து காடுகளை பாதுகாப்பது தவறானது. வேலிகளை அமைத்தாலே பயிர்களை  எளிதாக காப்பாற்றமுடியும்” என்கிறார் விலங்குநல செயற்பாட்டாளர் ரித்விக் தத்தா.


இந்தியா டுடே

Intheir sights (Rahul Noronha) 

pinterest

கருத்துகள்