இடுகைகள்

கல்விமுயற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி போராளி!

படம்
கல்வி போராளி ! அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் . " கல்விக்கு அதிக செலவழிப்பதாக உணர்கிறீர்களா ? கல்வி கற்பதை புறக்கணிப்போம் " என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திப்போராடும் கூட்டத்தை தன் கூர்மையான பேச்சின் வழியே தீர்க்கமாக ஒழுங்குபடுத்துகிறார் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவரான ராண்டி வெய்ன்கார்டன் .   கல்விக்கான நிதியை அதிகரிக்கவே இப்போராட்டம் .  மேற்கு வர்ஜீனியா , இலினாய்ஸ் , புவர்ட்டோ ரிகோ ஆகிய இடங்களிலும் போராட்டம் தொடங்கியுள்ளது . " பள்ளிகளின் சீரமைப்பு , வகுப்பறைகளில் இருக்கை , மேஜைகளுக்கான தேவை அதிகரிப்பு , பென்ஷன் , பொதுக்கல்விக்கான தொகை , காலாவதியான பாடத்திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி போராடுகிறோம் " என்கிறார் ராண்டி . மாணவர்களின் நலன்களைவிட ஆசிரியர்கள் பயனடையவே மெனக்கெடுகிறார்  என்று புகார்கள் என்றாலும் ராண்டி எதையும் பொருட்படுத்துவதேயில்லை . ட்ரம்ப் அரசுக்கு எதிரான பல்வேறு பேரணிகளிலும் ராண்டியை நீங்கள் பார்க்கலாம் . ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அவர்களுக்கான வழக்குரைஞராகவும் இரண்டு பணிகளையும் செய்து வருகிறா

மாணவர்களுக்கு கல்வியூட்டும் தேவதை!

படம்
மாணவர்களின் திறனறிவைக் கூட்டும் ஆராய்ச்சி மாணவி ! - ச . அன்பரசு கடவுள் தேசமான கேரளாவின் வடகரையின் பழங்காவு பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் தேவதையாய் வசீகரிக்கும் நிகிதா ஹரியைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது . கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் பொறியியல் முனைவர் மாணவியான இவர் , ஏழை மாணவர்களுக்கு ஏஐ எனும் செயற்கை அறிவை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அறிவியலின் உலகை திறப்பதற்காக உழைத்து வருகிறார் . எம் . டெக் படிப்பில் தங்கமெடல் அணிந்த ஐக்யூ அரசி நிகிதா , கோழிக்கோட்டில் உள்ள என்ஐடியில் லெக்சரராக பணியாற்றியபடியே ஐஐடியில் ஆராய்ச்சிப்படிப்புக்கு விண்ணப்பித்தார் . ஆனால் அங்குள்ள சூழல் நிகிதாவுக்கு ஏமாற்றம் தர , உடனே விமான டிக்கெட் போட்டு அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் முனைவர் படிப்பில் சேர்ந்தார் . கடந்தாண்டு டெலிகிராஃபின் கணினி பொறியியலில் டாப் 50 பெண்கள் லிஸ்டில் இடம்பிடித்த பின்தான் இந்தியா திரும்பியிருக்கிறார் நிகிதா . கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பொறியியல் துறை மாணவி , டெலிகிராப் பத்திரிகையின் டாப் 50 லிஸ்டில் இடம்பிடிப்