இடுகைகள்

நரம்பியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேச்சு குறைபாடு கொண்டுள்ளவர்களுக்கு மூளையில் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்த மருத்துவர் - பால் ப்ரோகா

படம்
  BIO டேட்டா பியர் பால் ப்ரோகா (Pierre Paul Broca 1824-1880) பிறந்த நாடு   பிரான்ஸ் பெற்றோர்  பெஞ்சமின் ப்ரோகா, அன்னெட்டா ப்ரோகா தொழில்   மருத்துவர், அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் முக்கிய ஆராய்ச்சி  மூளை உடலின் செயல்பாடுகளுக்கு கட்டுப்படுத்துகிறது என கண்டறிந்தது ஆராய்ச்சி வழிகாட்டிகள் பிலிப் ரோகார்ட் (Philippe Rocord), ஃபிராங்கோயிஸ் லியூரெட் (Francois Leuret) பிடித்தவேலை கபால அளவீடு, பேச்சு குறைபாடு கொண்டவர்களின் மூளையை வெட்டி ஆராய்வது சாதனை மூளையில் மொழியைக் கையாளும் பகுதி (Broca area)பற்றிய ஆராய்ச்சி வழிகாட்டி நவீன மானுடவியல் பள்ளிகளுக்கு.. உருவாக்கிய கருவி ஸ்டீரியோகிராஃப் (Stereograph) தொடங்கிய அமைப்பு மானுடவியல் சங்கம் (1859) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர். இவர், அங்குள்ள சைன்டே ஃபாய் லா கிராண்டே என்ற நகரில் பிறந்தார். தந்தை பெஞ்சமின் ப்ரோகா, மருத்துவர். 16 வயதில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். 20 வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்தார்.  1848ஆம் ஆண்டு பாரிஸ் மருத்துவப் பள்ளியில், உடற்கூறியல் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். அச்சமயத்தில் உடற்கூறியல் சங்க செயலாளராகவும் இர

மூளையின் பணி - மினி அலசல்!

மூளை எப்படி வேலை செய்கிறது? அம்பானி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறவும், பஞ்சர் கடையில் சுப்பிரமணி வேலை செய்யவும் ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஆம். அது மூளை வேலை செய்வதுதான். இருவருக்கும் இருக்கும் நேரம் ஒன்றுதான். இருவரும் யோசிக்கிறார்கள். ஆனால் அதனை யோசித்து சரியாக நடைமுறைப்படுத்துவதில் தொழிலதிபர் – வியாபாரி முந்தி விடுகிறார். இதுதான் சுப்பிரமணிக்கும் அம்பானிக்கும் உள்ள வேறுபாடு. மனம் தன் ஆசை, லட்சியம் சார்ந்து மூளையை கட்டுப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு சாரார், மூளைதான் உடல், மனம் என இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என அதற்கும் அறிவியல் விளக்கங்களை தருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மூளை நரம்பியல் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு பெருமளவு முன்னேறிவிட்டது. ஆனாலும் மூளை, மனம், உடல் என மூன்று அம்சங்களில் எது எதைக் கட்டுப்படுத்துகிறது என்ற சர்ச்சை இன்றும் கூட ஓயவில்லை. கிரேக்கத்தில் இதைப்பற்றிய கருத்துகளை அரிஸ்டாட்டில், டெஸ்கார்டெஸ் ஆகியோர் கூறியுள்ளனர். மூளை, மனம் என இரண்டையும் அவர்கள் தனியாக பிரித்துதான் கூறியுள்ளனர். இவர்களின் கருத்துகள் தத்து

மூளையின் ஆச்சரியங்கள்!

படம்
நம் மூளை எப்போது ஆச்சரியங்களை அள்ளித்தருவது. அதிலுள்ள சிந்தனை, எப்படி செயல்படுகிறது, சைக்கோ கொலைகாரர்களின் மூளை, புதிய விஷயங்களை பழகுவது, பழகிய விஷயங்களை சட்டென மறப்பது என ஆராய்ச்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூளை ஆராய்ச்சியாளர் தாரா ஸ்வர்ட் தி சோர்ஸ் என்ற நூலை இதுகுறித்து எழுதியுள்ளார். நம் மூளைகளுக்கு ஆசைகளை பழகினால் அதனை சாதிக்க முடியும் என்கிறார் தாரா ஸ்வர்ட். தற்போது எழுத்தாளராக சுயமுன்னேற்ற பேச்சாளராக உள்ளார் இந்த உளவியலாளர்.  ”நான் இந்த நூலை எழுதியது அறிவியல் முறையில் தங்கள் வாழ்க்கையை சரியானபடி வாழ நினைப்பவர்களுக்காகத்தான். நியூரோசயின்ஸ் குறித்த ஆய்வுகளை முதலில் பலரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று அதனை பலரும் தேடிவரக் காரணம், அதன் தேவை அதிகரித்துள்ளதான்.  Deccan Chronicle இன்று வாழ்வில் நீங்கள் பெறும் அனைத்து வெற்றிகளுக்கும் மூளையில் பங்கு பின்னணியில் உண்டு. அதுதான் உங்களின் ஆதாரம் அதாவது சோர்ஸ். நான் அறிவியல் முறையில் இந்த நூலில் கூறியுள்ளது அதுதான்.  நூலில் ஏராளமான ஆய்வுத்தகவல்கள், நோயாளிகளின் அனுபவங்கள், ஆளுமைகளை மேம்படுத்தும் ஐடியாக்கள் என