இடுகைகள்

சீதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுமிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ராணுவ வீரனின் கதை! - சீதாராமம்- ஹனு ராகவப்புடி

படம்
  சீதாராமம் - தமிழ்  துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா, தருண் பாஸ்கர்  இயக்குநர் ஹனுமந்த் ராகவப்புடி இசை - விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு - பிஎஸ் வினோத் தேசப்பற்று ஊற்றியெழுதிய காதல் கதை.  இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறார்கள். தேசப்பற்று என்பதோடு மனிதநேயம் என்பது எல்லைகளைக் கடந்தது. அதை நாம் இரும்புவேலிகளால் அடைக்க முடியாது என்பதையும், பலரின் தியாகங்களால்தான் நமக்கு உயிர்வாழும் வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது.  இதை தொடர்புடையவர்களே மறந்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.  கதை 1964 - 1985 என்ற காலகட்டத்திற்குள் நடைபெறுகிறது. அஃப்ரின் என்ற பெண்ணுக்கு அவரது தாத்தாவின் சார்பாக ஒரு கடிதம் கிடைக்கிறது. அதை அவள் கொண்டுபோய் சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு தாத்தாவின் சொத்து கிடைக்கும். அதை அவள் தான் மன்னிப்பு கேட்காமல் இருக்க பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்காகவும் மன்னிப்புக் கேட்க கூடாது. தான் செய்வதெல்லாம் சரி என நினைப்பு கொண்டவள் அஃப்ரின்.  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்திய அதிகாரி ஒருவரின் கார

பருந்து காப்பாற்றும் குழந்தை போர்மங்கையாக மாறும் கதை! - சீதா - மிதிலையின் போர்மங்கை- அமிஷ்

படம்
  சீதா மிதிலையின் போர்மங்கை சீதா  மிதிலை போர்மங்கை அமிஷ் திரிபாதி வெஸ்லேண்ட் பதிப்பகம் தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் அமிஷ் எழுதிய ராமாயணம் நான்கு நூல்களைக் கொண்டது. நான்காவது நூல் இன்னும் வெளியாகவில்லை. ராமன், சீதை, ராவணன் இந்த மூன்று நூல்களுமே நிறைய இடங்களில் சந்தித்து மீள்கின்றன. அவற்றை கச்சிதமாக நூலில் பொருத்திப் பார்த்து செம்மை செய்திருக்கிறார்கள். மூன்று நூல்களுமே வாசிப்பில் சிறப்பாகவே இருக்கின்றன.  இப்போது நாம் சீதாவைப் பார்ப்போம். ராமன், சீதை, ராவணன் என்ற மூன்று நாவல்களின் அடிப்படையும் அவர்களின் பிறப்பு, அதற்குப் பிறகு நடைபெறும் சில சிக்கலான சம்பவங்கள் அவர்களை எப்படி வடிவமைக்கின்றன, அதன் பொருட்டு அவர்கள் நடந்துகொள்ளும் விதம் என செல்கிறது.  சீதாவைப் பொறுத்தவரை அவள் யார் என்பது மூன்றாவது நூலான ராவணனைப் படித்தால் தான் தெரியும். இதிலும் நிறைய திருப்பங்களை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். குறிப்பாக ஸமீச்சி பாத்திரம். இது ஆண்களின் மீதான வெறுப்பு கொண்ட பெண் தளபதி பாத்திரம். இவள், தானாகவே முன்வந்து சீதாவுக்கு உதவுகிறாள். சிறுவயதில் நடந்த விபத்தில் சேரியில் வாழும் போக்கிரிகளை அடித்து உதைத்து

சட்டத்தை தனது வாழ்வாக கொள்பவனின் மனைவியை ராவணன் கொள்ளையடித்தால்..... - இஷ்வாகு குலத்தோன்றல் - அமிஷ்

படம்
  எழுத்தாளர் அமிஷ் இஷ்வாகு குலத்தோன்றல் அமிஷ் தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசன்  வெஸ்லேண்ட் ராமாயணத்தை தனது பார்வையில் எழுதியுள்ளார். இதில் மூன்று பாக நூல்கள் உள்ளன. ராவணன் ஆர்ய வர்த்தாவின் எதிரி நூலை முன்பே படித்து அதற்கான விமர்சனத்தை எழுதியுள்ளோம். இப்போது, இந்த நூலைப் பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைத்தால் சீதா - மிதிலாவின் போராளி நூலையும் வாசித்து எழுதுவோம்.  கதை தொடங்குவது தண்ட காரண்யா வனத்தில். லஷ்மணனும், ராமனும் மானை வேட்டையாட தயாராக இருக்கிறார்கள். அதை வேட்டையாடி தூக்கிக்கொண்டு வரும்போது சீதா , ராமனை அழைக்கும் குரல் கேட்கிறது. அதை தேடி வேகமாக போகும்போது ராவணன் சீதாவை புஷ்பக விமானத்தில் கடத்திக்கொண்டு செல்கிறான். பாதுகாப்பிற்கு இருந்த ஜடாயூ ஏறத்தாழ குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறார்.  கதை பின்னோக்கி செல்கிறது. அதில் அயோத்யா நகரம் எப்படி இருக்கிறது, அதன் கலாசாரம், அங்குள்ள மக்கள் எப்படி என மெல்ல வாசகர்களுக்கு தெரிய வருகிறது.  தசரதன் சப்தசிந்து கூட்டமைப்பில் மன்னராக இருக்கிறார். இதுதான் பல்வேறு சிற்றரசுகளின் கூட்டமைப்பு. இதனை பல்வேறு அடக்குமுறைகளை செய்து மிரட்டி, ஒடுக்கி கப்பம் கட்டு

இந்தியர்கள் அனைவருமே காமசூத்திரத்தை படிக்கவேண்டும்! - எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு

படம்
  ஸ்ரீமொயி  பியு குண்டு எழுத்தாளர் எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு சீதா கர்ஸ் என்ற நூலை எழுதுவதற்கு என்ன காரணம்? சிற்றின்பம் என்பது த த்துவம், உடல் சார்ந்த தூண்டுதல், ஆன்மிக அனுபவம் என்று கூறலாமா? இந்த நூல் பெண்ணியம் சார்ந்த சிற்றின்ப நூல். இது என்னுடைய இரண்டாவது நூல். மும்பையில் பத்திரிகையாளராக வேலை செய்தபோது சீதா கர்ஸ் நூலுக்கான ஐடியா தோன்றியது. இந்த நேரத்தில் நான் ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் துணிகளை காயப்போடுவது, கூண்டில் உள்ள கிளிகளுக்கு உணவிடுவது ஆகியவற்றை செய்துகொண்டிருப்பார். அப்போது அவரின் ஜாக்கெட்டில் உள்ள பட்டன்கள் போடப்படாமல் இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பார். இதுதான் சீதா கர்ஸ் நூலிலுள்ள மீராவின் பாத்திரத்தை உருவாக்க காரணமாக இருந்தது.  இந்த நாவலுக்கு எதற்கு சீதாவின் சாபம் என்று பெயர் வைத்தீர்கள்.  இதில் சீதாவுக்கு எந்த இடமுமில்லை. சீதா, ராமனின் மனைவி. அவளை அவளது வாழ்வில் விரும்பிய ஒருவன் ராவணன்தான். அவனும் கூட அவளை கடத்திச்சென்று வைத்திருந்தாலும் அவளை தொடக்கூட இல்லை. ஆனால் அந்த ஆசைக்காக அவன் கொல்லப்

காமத்தைப் பற்றி பேசும் நூல்கள்! - எழுதியவர்கள் அனைவரும் பெண்கள்தான்!

படம்
  காமத்தைப் பேசும் நூல்களில் சில... தி ஆர்ட்ஸ் ஆப் செடக்ஷன் சீமா ஆனந்த் ஆலெப் சீதாஸ் கர்ஸ் ஸ்ரீமோயி பியு குண்டு ப்ளூம்ஸ்பரி லாஸிங் மை வர்ஜினிட்டி அண்ட் அதர் டம்ப் ஐடியாஸ் மாதுரி பானர்ஜி பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  எரோடிக்  ஸ்டோரிஸ் ஃபார் பஞ்சாபி  விடோஸ் பலி கௌர் ஜஸ்வால் வில்லியம் மோரோ செக்ஸ் ஈஸ் மெமோர் ஆப் எ வுமன்ஸ் செக்சுவாலிட்டி பல்லவி பர்ன்வால் ப்ளூம்ஸ்பரி பாலஸ்  கல்ச்சுரல் ஹிஸ்டரி டாக்டர் அல்கா பாண்டே ஹார்பர் கோலின்ஸ் தி எல் வேர்ட் லவ், லஸ்ட் அண்ட் எவ்ரிதிங்க் இன் பெட்வீன் ஆஸ்தா அட்ரே பனான் ஹார்பர்கோலின்ஸ் இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவருமே பெண்கள் என்பதை நம்புங்கள். அதுதான் உண்மை.