இடுகைகள்

உலகம்-ரஷ்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதினின் உலக கோப்பை வெற்றி!

படம்
உலகப்கோப்பையில் வென்றது யார் ? நிச்சயம் புடின்தான் . பட்டியலில் 70 ஆவது இடத்திலுள்ள ரஷ்ய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை பலருக்கும் கிடையாது . 2015 ஆம் ஆண்டு 24 ஆவது இடத்திலிருந்து கீழிறங்கி எழுபதாவது இடம் எனும் இடத்தை பிடித்துள்ளது ரஷ்ய அணி . புடின் , விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று தேசியப்பெருமையாக அதனை மாற்றிவிட்டார் .  ஃபிபா போட்டியை நடத்துவதற்கான உரிமையை 2010 ஆம் ஆண்டு ரஷ்யா பெற்றது . இதற்காக ஸூரிச் சென்று சென்டிமெண்ட் உரை நிகழ்த்தினார் புடின் . பின்னர் சில ஆண்டுகளிலேயே ஃபிபா ஊழல் விவகாரம் வெளிவந்தது . இங்கிலாந்து உளவாளிக்கு விஷமளித்த விவகாரம் , சிரியா போர் ஆகியவை உலகநாடுகளுக்கு ரஷ்யாவை வில்லனாக்கினாலும் சொந்த நாட்டு மக்களுக்கு நாயகனாக விரும்பினார் புடின் . ரஷ்யா பதினொரு நகரங்களிலுள்ள மைதானங்களை 13 பில்லியன் செலவில் புதுப்பித்து உவாக்கியது . 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா உலக கோப்பைக்கு செலவழித்த தொகையை விட 4 மடங்கு அதிகம் . எண்ணெய் விலை குறைந்து , நாடுகளின் தடை உள்ள நிலையில் பிரமாண்ட போட்டி நடத்துவது ரஷ்யர்களை உற்சாகப்படுத்தியுள்ள