புதினின் உலக கோப்பை வெற்றி!
உலகப்கோப்பையில்
வென்றது யார்?
நிச்சயம் புடின்தான். பட்டியலில்
70 ஆவது இடத்திலுள்ள ரஷ்ய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை பலருக்கும்
கிடையாது. 2015 ஆம் ஆண்டு 24 ஆவது இடத்திலிருந்து
கீழிறங்கி எழுபதாவது இடம் எனும் இடத்தை பிடித்துள்ளது ரஷ்ய அணி. புடின், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று தேசியப்பெருமையாக
அதனை மாற்றிவிட்டார்.
ஃபிபா போட்டியை நடத்துவதற்கான உரிமையை 2010 ஆம்
ஆண்டு ரஷ்யா பெற்றது. இதற்காக ஸூரிச் சென்று சென்டிமெண்ட் உரை
நிகழ்த்தினார் புடின். பின்னர் சில ஆண்டுகளிலேயே ஃபிபா ஊழல் விவகாரம்
வெளிவந்தது. இங்கிலாந்து உளவாளிக்கு விஷமளித்த விவகாரம்,
சிரியா போர் ஆகியவை உலகநாடுகளுக்கு ரஷ்யாவை வில்லனாக்கினாலும் சொந்த
நாட்டு மக்களுக்கு நாயகனாக விரும்பினார் புடின்.
ரஷ்யா பதினொரு
நகரங்களிலுள்ள மைதானங்களை
13 பில்லியன் செலவில் புதுப்பித்து உவாக்கியது. 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா உலக கோப்பைக்கு செலவழித்த தொகையை விட 4
மடங்கு அதிகம். எண்ணெய் விலை குறைந்து,
நாடுகளின் தடை உள்ள நிலையில் பிரமாண்ட போட்டி நடத்துவது ரஷ்யர்களை உற்சாகப்படுத்தியுள்ளது
உண்மை. ஒலிம்பிக்கில் போதைப்பொருட்களை பயன்படுத்தியது ரஷ்யாவுக்கு
தடைவிதிக்கப்பட்டது. அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று
துணை பிரதமராக உள்ளது போன்ற புடின் சாகசங்கள் நாட்டுக்கு பெருமையல்ல. தீவிரவாத தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள் இன்றி உலக
கோப்பை நடைபெற்றால் புடினுக்கு முக்கியமான அரசியல் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.