டாங்கோ பாடல் யாருக்கு சொந்தம்? -இரு நாடுகளின் பிடிவாத வரலாறு!







டாங்கோவின் பூர்விக தேசம்!

உருகுவேயைச் சேர்ந்த கட்டிடக்கலை மாணவரான மாடோஸ் ரோட்ரிகுவெஷ் உருவாக்கிய டாங்கோ நடனப்பாடல் செம ஹிட்டானது பின்னர்தான். மெலடியாக உருவானாலும் இசைப்பயிற்சியில்லை என்பதால் பாடல் மீது மாடோஸூக்கு ஹிட்டாகுமா என சந்தேகம் இருந்தது. உடனே அர்ஜென்டினா ஆர்க்கெஸ்ட்ராக்காரரான ராபர்ட் ஃபிர்போவை நாட, அவரின் மாற்றங்களால் பாடல் லா கம்பர்சிதா என பெயர்பெற்று பிரபலமானது.


 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாடல் உரிமையை 50 பெசோக்களுக்கு விற்றுவிட்டார். 300 படங்களில் 2 ஆயிரம் வகைகளில் பயன்படுத்தப்பட்ட பாடல் இது. பாடலில் சில மாற்றங்களை செய்து எல் டாங்கோ என்ற பெயரில் கார்லோஸ் கார்டெல் வெளியிட அவரை தங்கள் நாட்டு குடிமகன் என அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே நாடுகள் உரிமைகொண்டாடின. இருபதாண்டுகளாக தென்அமெரிக்க கோர்ட்டுகளில் பாடலின் காப்புரிமைக்கு போராடிய மாடோஸ், 1948 ஆம் ஆண்டு 80 சதவிகித காப்புரிமையைப் பெற்றார். கார்லோஸ் உருகுவேயில் பிறந்தாலும் அந்நாட்டு குடியுரிமை பெற்றிருக்கவில்லை. பின்னாளில் சுயசரிதை நூலில் அவரின் உருகுவே பூர்விகம் வெளியானது. டாங்கோ நடனத்தின் பூர்விக தேசம் அர்ஜென்டினாவா, உருகுவேயா என்ற குழப்பம் இன்றும் நீடித்தே வருகிறது

பிரபலமான இடுகைகள்