இஸ்‌ரோ தேடும் விண்வெளி வீரர் யார்?







விண்வெளியில் இஸ்‌ரோ இந்தியர்

அண்மையில் விண்வெளிக்கு வீரர்களை கொண்டு சென்று திரும்ப வரும் ஹியூமன் கேப்சூல் டெக்னிக்கை ஹரிகோட்டா மையத்தில் இஸ்‌ரோ சோதித்துள்ளது. மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த சோதனை, விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக கேப்சூல் மூலமாக மீட்கும் Pad Abort Test(PAT) ஆகும்.

விண்கலங்களை திரும்ப பயன்படுத்தும் RLV-TD சோதனையை இஸ்‌ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில் அடுத்த முக்கிய சோதனையாக சந்திரயான் 2 உள்ளது. அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படவிருக்கும் சந்திரயான் 2 வின் திட்ட மதிப்பு 800 கோடி.

ரீயூஸபிள் விண்கல தொழில்நுட்பத்தை இந்தியா கண்டறிந்தாலும் இன்னும் மேலதிக முன்னேற்றம் தேவையாகவுள்ளது. "அடுத்த பத்தாண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கல தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம் பிடிப்பதோடு, பத்தில் ஒருபகுதி மட்டுமே இதற்கு செலவாகும்" என்கிறார் இஸ்‌ரோவின் முன்னாள் தலைவரான கிரண்குமார். இஸ்‌ரோ பயன்படுத்தும் TSTO தொழில்நுட்பம் விண்வெளிக்கு வீரர்கள் செல்லும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என இஸ்‌ரோ கூறியுள்ளது.

பிரபலமான இடுகைகள்