பால்பண்ணையில் செயற்கை நுண்ணறிவு!
பசு டேட்டா!
அமெரிக்காவில் 1970 ஆம்
ஆண்டில் பண்ணைக்கு 25 பசுக்கள் இருந்தாலே அதிகம். ஆனால் இன்று பண்ணைக்கு 3 ஆயிரம் பசுக்களுககு அதிகம் உள்ளன.
எப்படி கண்காணிப்பது?
தற்போது தொழில்நுட்பங்கள் மூலம் பசுக்களின்
நோய்கள், பால் சுரப்பு உள்ளிட்ட அனைத்தையும் பட்டியலிடும் அளவு
வசதிகள் வந்துவிட்டன. மனிதர்களின் உதவியின்றி பசுக்களிடமிருந்து
பாலைக் கறக்கவும் அதனை சுத்தப்படுத்தவும் ரோபாட்டிக் டெக்னாலஜி இதற்கு உதவுகிறது.
55 மாடுகளுக்கு ஒரு ரோபாட்டிக் யூனிட் என பொருத்தப்பட்டு இச்செயல்பாடு
நடைபெறுகிறது. 2013 ஆம் ஆண்டு 2,500 என்று
பயன்படுத்தப்பட ரோபாட் யூனிட்டுகளின் எண்ணிக்கை இன்று 35 ஆயிரமாக
உலகெங்கும் அதிகரித்துள்ளது. cow CPS எனும் சிஸ்டம் பசுக்களை
தினசரி நானோநொடி கூட பிரேக் இன்றி கண்காணித்து அவற்றின் விருப்பத்துடன் பாலை பிழிந்தெடுப்பதாக
கூறுகின்றனர். பசு சாப்பிடுவது, ஓய்வெடுப்பது
பால்கொடுக்க தானே முன்வருவது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.