இஸ்ரோவின் எஸ்கேப் சிஸ்டம்!
உங்களில் யார்
அடுத்த ராகேஷ் சர்மா?
இஸ்ரோ அண்மையில்
விண்கலனில் செல்லும் வீரர்களை அவசரநிலையில் காப்பாற்றும் எந்திரத்தை(CES) ஹரிகோட்டாவிலுள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பெங்களூருவிலுள்ள
மையத்தில் விண்வெளி வீரர்களுக்கான உணவு, உடைகள் விஷயத்திலும் ஆராய்ச்சிகள்
ஆன் தி வே. இதற்காக டிஆர்டிஓவுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. அடுத்த விஷயம் என்ன? வீரர்களின் தேர்வுதான்.
1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஷ் டி 11 விண்கலத்தில்
இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா பயணித்து முதல் இந்தியர் என சாதனை படைத்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு
அனுப்பும் திட்ட மதிப்பு
2 பில்லியன் டாலர்கள். ஆனால் அரசு முதல்கட்டமாக
இஸ்ரோவுக்கு அளித்துள்ள தொகை 145 கோடி ரூபாய் மட்டுமே.
பத்தாண்டுகளாக இதற்கான ஆராய்ச்சிகளை செய்து வரும் இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி எம்கே-3 எனும் 8 டன்
எடையை சுமக்கும் திறன்கொண்ட ராக்கெட்டை இவ்வாண்டின் இறுதியில் சோதிக்கவிருக்கிறது.