விஸ்வரூப இந்தி!
விஸ்வரூபம் எடுக்கும்
இந்தி!
இந்திய அரசு கிடைக்கும்
சந்து பொந்தில் எல்லாம் இந்தியை திணிக்கும் முயற்சியில் 25 சதவிகித
வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இந்தி
2001-2011 காலகட்டத்தில் நூறு மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது.
பெரும்பாலான மொழிகளுக்கு ஆதாரமான சமஸ்கிருதமும் மேற்சொன்ன காலகட்டத்தில்
76 சதவிகித வளர்ச்சி காட்டி வியக்க வைத்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புபடி
காஷ்மீரி
- 22.97%, குஜராத்தி- 20.4%, மணிப்பூரி-20.4%,
பெங்காலி - 16.63% ஆகியவை இந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு அடுத்தபடியாக வளர்ச்சி காட்டியுள்ளன.
இந்திய அரசின்
பொதுமொழியான ஆங்கிலம்
14.67(2,60,000) சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் மக்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு,
கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பெரியளவு வளர்ச்சியின்றி தடுமாறி
வருகிறது. பட்டியலிடப்படாத பிலி மற்றும் பிலோடி ஆகிய மொழிகள்
நூறுமில்லியன் மக்களின் மூலம் அழியாமல் பிழைத்துள்ளன.
2
க்யூஆர் வழியே
பசுமைத்தகவல்கள்!
திருவனந்தபுரத்திலுள்ள
இன்டாக் அமைப்பு கனகாகுன்னு பேலசிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல்களை அறிய டிஜிட்டல்
வழியைக் கண்டறிந்துள்ளது.
முதுகலை மாணவரான
அகிலேஷ்,
பேலஸ் கார்டனிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து அங்குவரும்
சுற்றுலா பயணிகள் அறியும் விதமாக தொகுத்துள்ளார். நியோரீடர் ஆப்
வழியாக க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் 21 ஏக்கரிலுள்ள
126 தாவரங்களைப் பற்றிய துல்லியமான தகவல்களை அறிய முடியும் என்பது இதன்
ஸ்பெஷல். இத்தகவல்களை தொகுப்பதில் மாணவர் அகிலேஷூக்கு வழிகாட்டியாக
பேராசிரியர் கங்காபிரசாத் உதவியுள்ளார்.
ngo_Valluvan'>
இந்திய அரசின்
பொதுமொழியான ஆங்கிலம்
14.67(2,60,000) சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் மக்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு,
கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பெரியளவு வளர்ச்சியின்றி தடுமாறி
வருகிறது. பட்டியலிடப்படாத பிலி மற்றும் பிலோடி ஆகிய மொழிகள்
நூறுமில்லியன் மக்களின் மூலம் அழியாமல் பிழைத்துள்ளன.
3
கழிவறை இன்றி கல்யாணம்
இல்லை!
ஹரியானாவிலுள்ள
சிர்சாவிலுள்ள கோடிகன் கிராமத்தில் கழிவறை இல்லாத வீடுகளுக்கு தங்கள் பெண்களை திருமணம்
செய்து கொடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்.
"திறந்தவெளியில்
பெண்கள் மலம் கழிப்பது பெருமையல்ல. எனவே எங்களது கிராமசபை கழிவறை
இல்லாத குடும்பங்களுக்கு பெண்களை திருமணம் செய்து தருவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்"
என்கிறார் அக்கிராமத்து பெண்மணி ஒருவர். பிரதமர்
மோடியின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் கோடிகன் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும்
கழிவறை கட்டப்பட்டு இருப்பதை பெருமையாக சுட்டிக்காட்டுகிறார் மாவட்ட மேலாண்மை அதிகாரி
பிரீத்பால் சிங். 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களின்
வீடுகளிலும் சுகாதார வசதிகள் செய்யப்படவேண்டும் என்பது இந்திய அரசின் இலக்கு.