ஜனநாயக அரசுக்கு விதிவிலக்குகள் அழகல்ல"
நேர்காணல்
"வெளிப்படையான ஜனநாயக அரசுக்கு விதிவிலக்குகள் அழகல்ல"
அருணா ராய், சமூக செயல்பாட்டாளர்.
தமிழில்:ச.அன்பரசு
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக(1968-74)
இருந்து சமூக செயல்பாட்டாளராகிய அருணா ராய், மகசசே
விருதுவென்ற எழுத்தாளர். இவரின் பெயரை உலகிற்கு உரக்கச்சொல்லுவது
தகவலறியும் உரிமை சட்டத்திற்கான செயல்பாடுகள்தான்
1972 ஆம் ஆண்டு குடிமைப்பணியை துறந்து
ராஜஸ்தானில் மக்களுக்காக பணியாற்றியத் தொடங்கிய பயணத்தை கூறுங்கள்.
புத்திசாலித்தனமான, நேர்மையான ஏன் வேடிக்கையான மனிதர்களை அறிந்துகொண்ட புதுமையான பயணம் என்னுடையது.
தகவலறியும் உரிமைச்சட்டத்தை கொண்டுவரும் பணியில் நான் என்ன செய்யவேண்டும்
என மக்கள் எனக்கு உணர்த்தினர். நம்பிக்கையும், நடைமுறை அறிவுடன் நான் குழப்பங்கள் இன்றி செயல்பட்டதற்கு என்னைச்சுற்றியுள்ள
எளிய மக்களே காரணம்.
ஆர்டிஐ சட்டம் அமுலான நாள் முதல் இதுவரை அதனை பயன்படுத்திய
எழுபது நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அரசின் அச்சுறுத்தலாக
பார்க்கிறீர்களா?
ஆர்டிஐ சட்டத்தின் மூலம் மக்கள், அரசு அதிகாரத்தை கேள்வி கேட்பதால் அதிகாரவர்க்கத்தினருக்கு எழும் கோபத்தின்
விளைவே கொலைவெறித்தாக்குதல்கள், படுகொலைகள். NCPRI தகவல்படி இதுவரை மக்கள் நன்மைக்காக அரசு எந்திரத்தின் ஊழல்,ஒழுங்கீனங்கள் குறித்து கேள்விகளை எழுப்பிய 150 பேர்
கடுமையான வன்முறைக்கு இலக்காகியுள்ளனர். படுகொலை, தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் அனைவரும் முதலில் மிரட்டப்பட்டுள்ளனர்.
வாய்மையின் சக்தி தரும் மகிழ்ச்சியோடு மக்களுக்காக அதனை கைகளில் ஏந்தியுள்ள
சமூக ஆர்வலர்களின் உயிரைக் காப்பாற்றுவதும் அரசின் முக்கியக்கடமை.
சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு விதிவிலக்கு
அளித்தது ஆர்டிஐ சட்டத்தை பலவீனமாக்கியுள்ளதா?
சிபிஐ என்பது தன்னாட்சியாக செயல்படும் ஒரு விசாரணை
அமைப்பு தவிர அது பாதுகாப்பு அமைப்பு கிடையாது பட்டியல் 2 பிரிவு 8 இன் கீழ் சிபிஐ, ஆர்டிஐ
சட்டத்தில் விலக்கு பெற்றிருக்கிறது. இந்திய அரசின் கட்டுப்பாடின்றி
தன்னிச்சையாக செயல்படும் என்பதால் சிபிஐ அமைப்பை பல்வேறு வழக்குகளை விசாரிக்க அணுகுகிறார்கள்.
ஆனால் இந்திய அரசு தொடர்ச்சியாக அணுசக்தி, உயிரிதொழில்நுட்பம்
தொடர்பான விஷயங்களையும் ஆர்டிஐ சட்டம் மூலம் மக்கள் அறியமுடியாதபடி சட்டத்திருத்தம்
கொண்டுவர முயற்சித்து வருகிறது. ஜனநாயகத்தின் வெளிப்படைத் தன்மையை
அழிக்கும் அரசின் மூர்க்கமான இச்செயல்பாடுகள் எந்நாளும் மக்கள்நல அரசுக்கு புகழ்பெற்றுத்தராது.
ஆர்டிஐ சட்டத்திலுள்ள பலவீனங்களை கூறுங்கள்.
அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை கோரும்
விதத்தில் எந்த பலவீனங்களும் கிடையாது. ஆர்டிஐ சட்டத்தை
நீர்த்துப்போக செய்யும் மிரட்டல்கள், சட்டரீதியான அரசின் நடவடிக்கள்தான்
ஆபத்தானவையாக உருவாகி வருகின்றன. பொது தகவல் அதிகாரிக்கு தகவல்களை
அளிப்பது குறித்த பயிற்சி இன்று வழங்கப்படுவதில்லை. தகவல் ஆர்வலர்கள்,
தகவல்கள் பெறுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சட்டங்களின் மூலம் முயற்சிசெய்வது
ஆபத்தான ஒன்று.
ஒரு மணிநேரத்திற்கு 300
மனுக்கள் தகவல்கோரி வருகின்றன. தகவல்கள் தருவதற்கான
காலதாமதமும் அதிகரித்துள்ளது. என்னதான் பிரச்னை?
விதியைப்பின்பற்றி அரசு செயல்படாததுதான் பிரச்னை. முறையாக தகவல் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து துறையை ஒழுங்குபடுத்தினால் தாமதம்
குறையும். மேலும் தாமதத்திற்கு தண்டனை என்பதும் அவசியம்.
-நன்றி: Damini Goel,The
New Indian Express