கனடாவின் பெயர் சொல்லும் படைப்புகள்!







கனடா ஸ்பெஷல்!

CANADIAN MILK CHOCOLATE

கிரிஸ்பியாக அடுத்தவர் கையிலிருப்பதை கூட பிடுங்கி தின்னும் ஆசை தோன்றச்செய்வது கனடா மில்க் சாக்லெட். அமெரிக்கா சாக்லெட் போல கசப்பில் திளைக்காமல் தித்திப்பாகவும் க்ரீம் சுவையிலும் அசத்தும் சுதேசி கனடா சாக்லெட்டுகள் அமெரிக்காவிலும் விற்பனையில் பின்னிபெடலெடுக்கின்றன.

BUTTER TARTS

சோள சிரப், சர்க்கரை, வெண்ணெய் கலந்து செய்யப்படும் அருமையான உணவு. பிரான்சிலிருந்து 1600 களிலேயே கனடாவுக்கு வந்துவிட்ட உணவு என்கிறது உணவு சர்வே. கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு உணவான பட்டர் டார்ட்ஸ் கனடா நாட்டு பேக்கரிகளில் கிடைக்கும் நல்லுணவு.

MILK BY THE BAG

நம்புங்கள். பாக்கெட்டில் அல்ல; பிளாஸ்டிக் பேக்கிலுள்ள பாலை வாங்கி தோளில்போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடலாம். ஒன்டாரியோ, க்யூபெக், கிழக்கு கனடா ஆகியவற்றில் பால் பேக் மிக பிரபலமானவை. நிறைய பேருக்கு தேவையான பாலை இம்முறையில் பர்சேஸ் செய்யலாம்.


RED RIVER CEREAL

கோதுமை, கம்பு ஆகியவற்றால் செய்யப்படும் அற்புத சுவைகொண்ட உணவுவகை. 1924 ஆம் ஆண்டிலிருந்து உலகை ஆண்டுவரும் உணவை சுடச்சுட சாப்பிட்டால் லன்ச்மேப் போட்டு கனடாவுக்கு பிளைட் பிடிப்பீர்கள்.