பறிக்கப்படும் ஆப்கன் குழந்தைகளின் கல்வி!


Image result for afghan girl education




கல்வியின்றி தவிக்கும் ஆப்கன் குழந்தைகள்!

ஆப்கானிஸ்தானின் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். போர், வறுமை, கலாசாரம் என பல்வேறு தடைகள் இதற்கு காரணங்களாக உள்ளன.

.நா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001 ஆம் ஆண்டு தாலிபன் வீழ்ந்தபிறகு பள்ளிகளில் பெண்குழந்தைகள் சேரும் விகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனாலும் 7-17 வயதுள்ள பெண்குழந்தைகளில் 44% பேர்(3.7 மில்லியன்) பள்ளிக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர் என்பதை யுனிசெஃப் மற்றும் நாட்டின் கல்வித்துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தீவிரவாதம் தலைதூக்கிய பகுதிகளில் பள்ளி செல்லாத சிறுமிகளின் எண்ணிக்கை 85%.

தலைதூக்கும் தீவிரவாதமும், ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளிக்க முடியாத ஆப்கன் அரசின் திறனின்மையும், குழந்தை திருமணங்களும் பெண்குழந்தைகளை பள்ளிகளிலிருந்து எளிதில் விலக்கிவைக்கிறது. புதிய பெண் ஆசிரியர்களை பயிற்சியளித்து பணியளிப்பதை ஐ.நா அறிக்கை ஊக்குவித்தாலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் ஆப்கனில் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்படுவது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி சக்திவாய்ந்த வாகனம்" என்கிறார் ஆப்கன் கல்வி அமைச்சரான முகமது இப்ராஹிம்.



  

  

பிரபலமான இடுகைகள்