அகதிகளுக்கு உதவினால் தண்டனை!





Image result for Viktor Orbán




அகதிகளுக்கு உதவினால் தண்டனை!


முறையான ஆவணங்களில்லாத அகதிகளுக்கு தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட யார் உதவினாலும் சிறைதண்டனை என்ற மசோதாவை ஹங்கேரி அரசு கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்த ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களின் வழக்குகளை தடைசெய்துள்ளது ஹங்கேரி நீதிமன்றம். 'Stop Soros' என்ற அகதிகளின் குடியேற்றத்தை தடுக்கும் மசோதா, இவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பினரை கைது செய்யவும் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் உதவுகிறது.

"ஹங்கேரி அரசின் நடவடிக்கை அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான ஒன்று." என்கிறார் ஐரோப்பாவின் ஆம்னஸ்டி அமைப்பு இயக்குநர் கௌரிவான் குலிக். ஏப்ரல் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனின் ஃபிடெஸ் கட்சி கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவு வாக்குகள் 160. அகதிகள் விஷயத்தில் சமரசத்திற்கு இடமேயில்லை என்று பிரதமர் விக்டர் கூறிவிட்டார். மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தை உருவாக்கிய ஜார்ஜஸ் சோரோஸ் பெயரை இதற்கு சூட்டி மனிதநேயமற்ற விதிகளை ஹங்கேரி அரசு உருவாக்கியுள்ளது என ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு(OSCE) ஆகியவை ஹங்கேரியின் முடிவை ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு புறம்பானது என விமர்சித்துள்ளன. மேலும் ஹங்கேரியில் அகதிகளுக்கு உதவிகளைச் செய்யும் என்ஜிஓக்களை தடுக்க 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.


பிரபலமான இடுகைகள்