ஹாங்காங்கில் மொழிப்போர்!
சீனா ஆக்கிரமிப்பில்
ஹாங்காங்!
பிரிட்டிஷ் காலனியாக
இருந்த ஹாங்காங்,
1997 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது.
அதிகாரப்பூர்வ மொழியான கன்டோனீஸ் மறைந்து தற்போது சீனாவின் மாண்டரின்
பரவிவருவதை அந்நாட்டு மொழியியல் வல்லுநர்கள் பதட்டத்துடன் கவனித்து வருகின்றனர்.
இருபதாண்டுகளாக
ஹாங்காங் குடிமக்கள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் போராடிவருகின்றனர். மொழி,
வணிகம் என அனைத்திலும் ஹாங்காங்கை ஆக்கிரமிக்க சீன அதிபர் ஜின்பிங் முயற்சி
எடுத்து வருகிறார். கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு கல்வி,
சுற்றுலா என கிடைத்த இடத்தில் மாண்டரின் மொழியை புகுத்தி வருகிறார்.
ஹாங்காங்கில் 80 சதவிகிதம் பேர் காண்டனீஸ் மொழியை
பேசிவருகின்றனர். எழுபது சதவிகித தொடக்கப் பள்ளியில் மாண்டரின்
மொழி வழியாகவே பாடம் நடத்தப்படுகிறது. சீனாவை வேலைவாய்ப்புக்கு
சார்ந்திருப்பதால் மாண்டரின் மொழியை படிக்கும் கட்டாயம் ஹாங்காங் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை மாற்ற சான் லோக் ஹாங் உள்ளிட்ட தன்னார்வலர்களின் அமைப்புகள்(SLH)
முயற்சித்து வருகின்றன. குவாங்சூ உள்ளிட்ட பகுதிகளில்
காண்டனீஸ் மொழி அறிவிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து
வருகின்றன.
கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் இரண்டின் போர்க்கள
நாடாக ஹாங்காங் மாறியதோடு மொழிப்போரும் அதன் அங்கமாகியுள்ளது.