இந்தியா பொதுமருத்துவத்திற்கு செலவழிப்பது எவ்வளவு தெரியுமா?
அறிவோம் தெளிவோம்!
இந்திய அரசு பொதுசுகாதாரத்திற்கு
மக்கள் ஒருவருக்கு ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை ரூ.1,112. மாதத்திற்கு ரூ.93, தினசரி ரூ.3 என கணக்கு வருகிறது. இது தனியார் மருத்துவமனைகளில் பெறும் ஆலோசனைக் கட்டணத்தைவிட
குறைவு.
2009 ஆம்
ஆண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தியில் 1.02% ஆக உள்ள மருத்துவ சிகிச்சைதொகை மாறவேயில்லை. மிக குறைந்த
தனிநபர் வருமானம் கொண்ட நாடுகள் கூட 1.4% மருத்துவத்திற்காக செலவழித்து
வருகின்றனர் என்ற உண்மையை சுகாதாரம் குடும்பநலத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா வெளியிட்ட அறிக்கை(ஜூன்19,2018) தகவல் கூறுகிறது.
இந்தியாவை விட
இலங்கை 4
மடங்கும்(1.6%), இந்தோனேஷியா 2 மடங்கும் பொதுமருத்துவத்திற்காக செலவு செய்கின்றன. 2025 ஆம் ஆண்டு ஜிடிபியில்
2.5%(தேசிய சுகாதாரக்கொள்கை 2017) என இலக்கு வைத்துள்ள
இந்திய அரசு, 2010 ஆம் ஆண்டு இலக்கான 2 சதவிகிதத்தையே எட்ட முடியாதது வேதனை.
மாநில அரசுகளில்
மிசோரம் தனிநபருக்கு ரூ.5,862
செலவிடுகிறது. இது மத்தியஅரசின் அளவைவிட
4 மடங்கு அதிகம். அருணாசலப்பிரதேசம் - ரூ.5,177, மத்தியப்பிரதேசம் - ரூ.5,126,
சிக்கிம் -ரூ.5,126. மிக
குறைந்த அளவாக பீகார் ரூ.491 ரூபாயை மக்களுக்கு செலவிடுகிறது.