மேட்ரிமோனிக்கும் ஆதார் அவசியமாம்!

ஆதார் செக்கிங் அவசியம்!

அரசு நிறுவனங்களைப்போலவே பிரபல திருமணப்பொருத்த தளங்களிலும் ஆதார் எண்களை கேட்கத்தொடங்கியுள்ளனர். என்ன காரணம்? டூப்ளிகேட் புகைப்படங்கள், போலி விவரங்கள் உள்ளிட்டவற்றை அப்டேட்டி நடக்கும் கல்யாணங்கள் பின்னாளில் உண்மை தெரிந்து களேபரமாவதுதான் காரணம்.

91 சதவிகித பெண்கள் மேரேஜ் மாப்பிள்ளைகளின் புரோஃபைல் பொய்களை நம்புவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பிராண்ட் இமேஜை காப்பாற்ற பிரபல மேட்ரிமோனி தளங்கள் ஆதார் எண்களை கட்டாயமாக்கியுள்ளன. "ஒருநாளில் கோடிக்கணக்கான வரன்களின் தகவல்கள் பார்க்கப்பட்டு வருவதால் தகவல்களின் உறுதித்தன்மையை சரிபார்க்கும் அவசியத்திற்காகவே இம்முயற்சி. இதன்மூலம் தகவல்களை தவறாக பயன்படுத்தும் செயல்பாடுகளை குறைக்கமுடியும் என நம்புகிறோம்" என்கிறார் பிரபல திருமணப்பொருத்த நிறுவன இயக்குநரான கௌரவ் ரக்‌ஷித். முன்னதாக பான்கார்டு மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இணைப்பதோடு இனி ஆதாரும் கட்டாயமாவது நம்பிக்கைக்கு கேரண்டி தருகிறது.