சீனா, வடகொரியா உறவு எப்படி?




Image result for china north korea relations


சீனா - வடகொரியா: இணைந்த கைகள்!


சீனா வடகொரியாவுடன் கொண்ட நட்பு குறித்து மக்களிடம் உரையாற்றிய மாவோ, உதடும் பற்களும் போல நெருக்கமான உறவு என்று குறிப்பிட்டார்.

1950 ஆம் ஆண்டு சீனாவின் மாவோ, கொரியா போரில் வடகொரியாவுக்கு ஆதரவு தெரிவித்து தன் நாட்டு ராணுவப்படைகளை யாலு ஆற்றுப்பாதை வழியாக அனுப்பி வைத்தார். இப்போரில் துரதிர்ஷ்டவசமாக மாவோவின் மூத்த மகன் படுகாயமுற்று இறந்துபோனார்.

1961 ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கும் வடகொரியாவுக்குமான ஆயுத உறவு நெருக்கமானது. மேலும் வடகொரியா ஆட்சியாளர்களான இரண்டாம் கிம் சங் தொடங்கி அறுபது ஆண்டுகளாக வடகொரியா கம்யூனிச தோழர்களுடன் உறவை வளர்த்து வருகிறது சீனா.

வடகொரியாவின் ஒட்டுமொத்த வியாபாரத்தில் சீனாவின் பங்கு 90 சதவிகிதம். வியாபார மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். எண்ணெய் முதல் விவசாயப்பொருட்கள் வரையிலான அனைத்து தேவையான பொருட்களையும் வடகொரியா சீனாவிடமிருந்து பெற்றுவருகிறது.

2006 ஆம் ஆண்டு வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியபோது ஐ.நா சபை பொருளாதார தடைகளை விதித்தபோதும் சீனா தலையிட்டது. இதன் விளைவாக, தடை ஆணையின் வலு குறைந்துபோனது.