பேக் டூ பேக் சென்னை சீக்ரெட்ஸ்: மெட்ராஸ் உதயம்!
சென்னை சீக்ரெட்ஸ்! - பிகே
மெட்ராஸ் உதயம்!
ஆங்கிலேயர்களின்
தொழிற்சாலை 1639ம் ஆண்டு உருவானது.‘History of the City of Madras’ என்கிற நூலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ்.னிவாசாச்சாரி
‘‘பழவேற்காட்டில் இருந்த டச்சுக்கும், சாந்தோமில்
இருந்த போர்த்துகீசியர்களுக்கும் நடந்த போர்களால் மக்கள் நிம்மதி இழந்தனர்.
அதைத் தடுக்க, இப்பகுதியை ஆண்ட தமர்ல
வெங்கடாத்ரி நினைத்து, டச்சுப் பகுதிக்கும், சாந்தோமிற்கும் இடையில் தம் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் கிராமத்தை(சென்னப்பட்டணம்) உருவாக்குகிறார்.
ஆங்கிலேயர்களுக்கு
மணல்திட்டு பகுதியைத் தமர்ல வெங்கடாத்ரி அளிக்கும்போது, அப்பகுதி
ஒப்பந்தத்தில் மதராசபட்டிணம் என்றுள்ளது. ஆக, மதராசபட்டிணம்,
சென்னப்பட்டிணம் என்பது இருவேறு கிராமங்கள்.
ஆங்கிலேயர்கள்
கோட்டையுடன்,
தங்குவதற்கான குடியிருப்பையும் கட்டுகின்றனர். கூடுதலாக, இந்திய பணியாளர்களுக்காக வடக்கே புதிதாக ஒரு நகரும் உருவாகிறது. இந்நகரையும்
சென்னப்பட்டிணம் என்றே நம்மவர்கள் அழைத்துள்ளனர். இந்தியர்கள் வாழ்ந்த இடம்
சென்னப்பட்டிணம் என்றும், கோட்டையும், ஆங்கிலேயர்களின்
குடியிருப்பும் மதராசபட்டிணம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயர்கள் இவ்விரு நகரினையும் மதராசபட்டிணம்(மதராஸ்) என்றே குறிப்பிட்டனர்’’ என்கிறார் அவர்.
சென்னை சீக்ரெட்ஸ்!- பிகே
தேவாலயத்தைக் கட்டிய குடும்பம்!
சாந்தோமில் ‘மத்ரா’
என்ற போர்த்துகீசிய குடும்பம் வசித்துள்ளது. தேவாலயத்தை கட்டி வழிபடும்
செல்வ செழிப்பு கொண்ட குடும்பம் இது. அன்று இக்குடும்பத்தின்
பெயரிலேயே அக்கிராமமும் அழைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, ‘மதராஸ்’ என்கிற சொல் வந்திருக்கலாம் என்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக 1927ம் ஆண்டு மேனுவல் மத்ரா மற்றும் அவரின் தாயாரின் கல்லறையை,
சாந்தோமில் புனித லாசரஸ் தேவாலயத்தைக் கட்டும்போது
கண்டெடுத்துள்ளனர்.
அதில், 1637 இல்
இங்கு கோயில் கட்டிய மத்ரா மற்றும் குடும்பத்தை கௌரவிக்கும் வசனங்கள் இருந்தன.
எப்படியோ, சென்னையும்
மெட்ராஸூம் மக்களின் மனங்களிலிருந்து பிரிக்க முடியாத பெயர்களாகிவிட்டன. இவ்விரு கிராமங்களுடன்
சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களும் ஒன்றிணைந்ததே சுமார் 80 லட்சம் மக்கள் வாழும்
இன்றைய சென்னை பெருகரம்!
சென்னை
சீக்ரெட்ஸ்!- பிகே
ஆங்கிலேயரின்
நீதிவிசாரணை!
மெட்ராஸில்
வணிகத்தைத் தொடங்கியதும் முதல் முதலாக ஒரு கொலைக் குற்றத்தை விசாரித்து தீர்ப்பு
வழங்கியது கிழக்கிந்திய கம்பெனி. வடக்குப்புறமாக ஓடிய எலம்பூர் நதியில் பெண்ணின்
சடலம் மிதந்து வந்தது. எந்தக் காயமும் இல்லாததால் நீரில் முழ்கி இறந்திருக்க
வேண்டும் என முடிவெடுத்து சடலத்தை அடக்கம் செய்ய உத்தரவிட்டது கம்பெனி. ஆனால், இந்த பெண்ணின் சடலத்தை வெளியில் கொண்டு வந்தவன் மீது அங்கு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவருக்கு டவுட்.
அவனது
வீட்டில் ரெய்டு நடத்தியபோது, அப்பெண்ணின் நகை ஆபரணங்கள்
இருந்ததைக் கண்டுபிடித்தனர். பிறகு, அப்பெண்ணை கொலை செய்ததாக
அவன் ஒப்புக் கொண்டான். இதை நாயக்கிடம் பிரிட்டிஷார் தெரியபடுத்தினர். அதற்கு
நாயக்கர் பிரிட்டிஷ் விதிமுறைப்படி தண்டிக்கலாம் என்று தெரிவித்து செய்தி அனுப்பினார்.
இதனால், கொலையாளியையும் அவருக்கு உடந்தையாய் இருந்தவரையும் தூக்கிலிட்டது
கிழக்கிந்திய கம்பெனி. இதை, ‘Vestiges Of Old Madras’ என்ற
நூலில் கர்னல் ஹென்றி லவ் குறிப்பிடுகிறார். பூந்தமல்லி
நாயக்கர் நீதிப்பொறுப்பை ஆங்கிலேயர்களிடம் தர அவர்கள் தம் அதிகாரத்தை மெட்ராஸில் செலுத்தத்
தொடங்கினர்.
காப்புரிமை: பேராச்சி கண்ணன்