பிட்ஸ்: வழுக்கைத்தலை கழுகு!
வழுக்கைத்தலை கழுகு!
அமெரிக்காவின்
லோகோ என்பதை தாண்டிய சுவாரசியங்கள் கழுகில் உண்டு. வழுக்கைத்தலை கழுகு என்றாலும்
உண்மையில் இக்கழுகுகள் வழுக்கையல்ல; அதன் இறகுகள் அப்படியொரு
தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆண்டுக்காண்டு இறகுகளின் வண்ணம்
மாறிக்கொண்டே வரும்.
ஹாலிவுட்டில் வருவது
போல கழுகின் வசீகரமாக இருக்காது. பலவீன அலறல், பிளிறல்
வழுக்கை கழுகின் அடையாளம்.
பார்க்க ஜென்மேன்
போல தெரிந்தாலும் ஆஸ்பிரேஸ் பறவைகளை விரட்டி மீன்களை திருடித் தின்பதில் அப்படியொரு
ஆனந்தம் வழுக்கை கழுகுக்கு.
காளை, வாத்து, நண்டுகள் உள்ளிட்ட
டிஷ்களை சாப்பிடும் இக்குழு மீன்கழிவுகளையும் முகம்சுளிக்காமல் சாப்பிடும்.
ஏகபத்தினி ராமனாய்
ஒரே பெண் இணையோடு காதலித்து வாழ்ந்து தன் குஞ்சுகளை சமத்துவமாய் இரையூட்டி பாதுகாத்து
வாழும் கழுகினம் இது.
நியூயார்க்கிலுள்ள கழுகு 38 வயதுவரை வாழ்ந்ததே
அதிகபட்ச சாதனை.
தெலுங்கு பட செட்
போல 4 அடி ஆழம், 5 அடி அகலத்தில் கூடுகட்டி குஞ்சு பொறித்து
வாழும்.புளோரிடாவிலுள்ள கழுகு கூடு 20 அடி
ஆழம், 9.5 அடி அகலத்தில் 2 டன்களுக்கும்
அதிக எடையில் உருவாகியிருந்தது.