சைக்கிள்களுக்கு நட்பு நகரங்கள்!
சைக்கிள் நகரங்கள்!
COPENHAGEN, DENMARK
உலகிலேயே சைக்கிள்களுக்கு
நட்பான நாடும்,
நகரமும் இதுவே. ஆபீஸ் பணியாளர்களில் 35
சதவிகிதம் சைக்கிளை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்துகிறார்கள்.
கோபன்ஹேகனிலிருந்து ஆல்பெர்ட்ஸ்லந்த் நகரை இணைக்கும் 390 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் செல்வதற்கான தனித்துவமான
பாதை அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிளை பராமரிப்பதற்கான அனைத்து வசதிகளும்
இப்பாதையில் உண்டு.
AMSTERDAM,
NETHERLANDS
இந்நகரத்தில் பயன்படுத்தும்
சைக்கிள்களின் எண்ணிக்கை
80 ஆயிரம். அனைத்து போக்குவரத்திற்கும் சைக்கிள்களையே
இங்குள்ள மக்கள் பயன்படுத்துகின்றனர். பல்வேறு இடங்களில் வாடகைக்கு
சைக்கிள்கள் கிடைக்கின்றன என்பதால் ஜாலியாக நகரை அணுஅணுவாக ரசித்து விசில் அடித்து
சுற்றிவரலாம்.
PORTLAND, OREGON
ஐரோப்பா போல சைக்கிள்
வசதிகள் இல்லாவிட்டாலும் போர்ட்லேண்டிலும்
சைக்கிள் வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். அரசின் சைக்கிள்களை வாடகைக்கு
எடுத்து பயன்படுத்தும் வசதி இங்குண்டு. நகரின் இலவசவரைபடம்,
பாதுகாப்பு விதிகள் அனைத்தும் வழங்கப்படும். சைக்கிள்
ஓட்டுவதற்கான வகுப்புகளும் இங்கு நடத்துகிறார்கள்.