ராணுவ கலக பயத்தில் அதிபர்!


Image result for venezuela president




வெனிசுலாவில் ராணுவக்கலக பயமா?

வெனிசுலாவில் மே.20 அன்று புதிய அதிபராக தேர்தலில் வென்ற நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார். தொடக்க உரையில் வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவற்றிலிருந்து விலகுவதாக கூறி ஜூன் 1 அன்று 39 அரசியல் கைதிகளை விடுவித்தார்.


மதுரோ அரசை எதிர்த்த எதிர்கட்சி தலைவர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், வங்கியாளர்கள் பிற மக்கள் என மொத்தம் 340 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்கிறது மனித உரிமைகள் அமைப்பு. அரசியலில் எதிர்ப்பு இல்லாமல் ஜெயிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஜெயிலில் அடைத்த மதுரோ, தற்போது அவர்களை விடுவிக்க காரணம் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற காரணம்தான். இவ்வாண்டில் மட்டும் ராணுவத்தைச் சேர்ந்த 35 அதிகாரிகள் கட்டம் கட்டி சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற ராணுவ தலைவர்களை உதவக்கோரிய எதிர்கட்சிகளிடமிருந்து அரசைக் காப்பாற்ற அமைச்சரவையில் ராணுவ ஆட்களாக நிரப்பிவருகிறார் மதுரோ. விடுவிக்கப்பட்டாலும் அனைவரும் வெளிநாட்டுக்கு செல்ல தடையுள்ளதோடு, தினசரி நீதிமன்றத்தில் கையெழுத்தும் போடவேண்டும். லோபஸ் எதிர்கட்சி தலைவராக புகழ்பெற்றவராக இருந்தாலும் அவர் வீட்டுச்சிறையில் உள்ளார்