குழந்தைகள் மனதில் கருத்துகள் உண்டு!
முத்தாரம் லைப்ரரி!
YOUR KID'S GONNA BE
OKAY
Building the
Executive Function Skills Your Child Needs in the Age of Attention
by Michael Delman
உங்கள் குழந்தைகள்
சலிப்புக்குள்ளானவர்களாக ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டு போனில் சோஷியல்தளங்களை
மேய்ந்துகொண்டு திரிகிறார்களா? அவர்களுக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் திடமான கருத்துகள்
உண்டு என அழுத்தமாக பேசுகிறார் ஆசிரியர் மைக்கேல் டெல்மன். சிறுவர்களின்
உளவியலை வருத்தாமல் அவர்களுக்கு பொறுப்பை புரியவைக்கும் சிறுதிட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் சுவாரசியமாகவும் புதிதாகவும் இருப்பது சிறப்பு.
DOING CAPITALISM IN
THE INNOVATION ECONOMY
by William H. Janeway
458pp
Cambridge University
Press
முதலீட்டாளரான
வில்லியம் ஹெச் ஜேன்வே தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்கு அரசு தரும் நிதி முயற்சிகளின்
சாதக, பாதகங்களை இந்நூலில் அலசுகிறார். பொருளாதாரத்தின் மூலமான
கொள்கைகள், அரசின் பங்கு, முதலீட்டாளர்களின்
எதிர்பார்ப்பு என பல்வேறு விஷயங்களை புதுமையான கோணத்தில் விறுவிறுவென வாசிக்கும் வேகத்தில்
ஆராய்ந்துள்ளார் ஆசிரியர்.