குற்றமனநிலையை குறைக்க மின்சாரம் உதவுகிறது!







குற்றங்களை குறைக்கும் மின்சாரம்!

மூளையில் மின் அதிர்ச்சி கொடுத்தால் ஐம்பது சதவிகித குற்றங்களை குறைக்கலாம் என பென்சில்வேனியா பல்கலைக்கழகமும், நானியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. transcranial direct-current stimulation (tDCS) எனும் முறையில் செய்யும் இச்சிகிச்சையை 81 ஆரோக்கியமான மனிதர்களிடம் செய்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

 "மூளையில் வன்முறை எண்ணங்களை உருவாக்கும் பகுதியை அடையாளம் கண்டுவருகிற முயற்சி இது" என்கிறார் ஆராய்ச்சியாளர் ராய் ஹாமில்டன். எலக்ட்ரிக் ஷாக் என்பதிலிருந்து வேறுபட்ட சிகிச்சை முறை என்பதோடு மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மின்சாரம் பாய்ச்சப்படும். இம்முறையில் தோலில் சிறு எரிச்சல் ஏற்படுத்தும் அளவு மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதன் தீவிர வடிவமே deep brain stimulation (DBS).

டிபிஎஸ் பார்க்கின்சன் நோயாளிகளுக்கு கடைசி சிகிச்சைமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது. இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ கானவெரா 2014 ஆம் ஆண்டு இதுகுறித்த கட்டுரையில் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுபவர்களை  நியூரோஸ்டிமுலேசன் முறையில் சோதிக்கலாம் என கட்டுரை எழுதி சர்ச்சையைக் கிளப்பினார். எதிர்காலத்தில் கைதிகளுக்கு இம்முறையை அரசு சோதித்துபார்க்கவும் வாய்ப்பு உள்ளது.


நிக்கோலா டெஸ்லா ரேடியோ, ரோபாட், ரிமோட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றின் பிரம்மா. கண்டுபிடிப்புகள் அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யத் தெரியாததால் உலகம் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை அவர் இறந்த பின்னரே அறிந்தது. செல்போன், லேசர்ஒளி, இணையம் உள்ளிட்டவற்றின் ஐடியாக்களை முன்னமே உருவாக்கிவிட்டார் டெஸ்லா. மழைநாளில் பிறந்தது முதல் நியூயார்க் ஹோட்டலில் இறக்கும்வரை டெஸ்லாவின் வாழ்வை பதிவுசெய்யும் சுயசரித நூல் இது.
nt-size:13.5pt;font-family:"Ubuntu","serif";color:#333333'>

பிரபலமான இடுகைகள்