அதிரடி விளையாட்டுகள்- எதிர்பாருங்கள்





அதிரடி விளையாட்டு!

Cyberpunk 2077
ஜிடிஏ கேம் போலவே புதுமையான எதிர்கால உலகில் அமைந்த உயிர்பிழைத்து ஓடும் விளையாட்டு. இரவு நேர நகரில் ஆறு பகுதிகளில் சாகசமாக மிஷன்களை எடுத்து உயிர்பிழைத்து உலகை வெல்வதே கேமின் தீம்.

Fallout 76
இந்த சீரிசில் இது 9 வது கேம். ஆன்லைனில் குழுவாக அல்லது தனியாக விளையாடலாம். உயிர்பிழைக்க நியூக்ளியர் ஆயுதம் வரை ஏந்தலாம் என்பதால் போர்க்களம் திகுதிகு ஆக்‌ஷன் அதிரடியில் அதிரும் என்பது கேரண்டி.
  
Spider-Man
உலகளவில் பிரபலமான பீட்டர் பார்க்கர் () சிலந்திமனிதன் உலகைக் காப்பாற்றும் பிரம்ம பிரயத்தன அதிரடிகள் கேமின் விசுவல் உலகை கொண்டாட்டமாக மறக்கவைக்கின்றன.

Super Smash Bros. Ultimate
ஒருவர் அல்லது பலர் விளையாடும் ஆக்‌ஷன் கேம். உயிர்பிழைக்கும் வாய்ப்பை செட் செய்துவிட்டு கேரக்டரை தேர்வு செய்து எதிரிகளை உதைத்து வதம் செய்யவேண்டியதுதான் ஸ்மாஷ் ப்ரோஸின் பாணி. நின்டெண்டோ கம்பெனியின் 5 ஆம் பாகம் இது.