காணாமல் போன குழந்தைகளை தேடிவரும் பெண்மணி!
குழந்தைகளுக்காக போராட்டம்!
இருபதாண்டுகளுக்கு பிறகு தன் சகோதரரனை சந்திப்போம்
என மார்க்கரிட்டா கனவிலும் நினைக்கவில்லை. எல் சால்வடோரின்ல
பனிரெண்டு ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப்போரில் ஆதரவற்றவர்களாக மாறிய நூற்றுக்கணக்கான
குழந்தைகளை குடும்பத்துடன் சேர்க்கும் பணியை 1992 ஆம் ஆண்டிலிருந்து
செய்து வருகிறார் மார்க்கரிட்டா.
1981 ஆம் ஆண்டு கொரில்லாக்கள் மற்றும் அரசு ராணுவத்திற்கும்
நடந்தபோரில் மார்க்கரிட்டாவின் நான்கு சகோதரர்கள் தொலைந்துபோனார்கள்.
"பிறருக்கு உதவுவது விட்டமின் ஊசியை எனக்கு நானே போட்டுக்கொள்வது
போல உதவுகிறது" என்கிறார் மார்க்கரிட்டா. 75 ஆயிரம் பேர் இறந்த போரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும்
அதிகம். இதில் பெற்றோர் இல்லாத குழந்தைகள் அமெரிக்காவுக்கு தத்துகொடுக்கப்பட்டனர்.
மார்க்கரிட்டா Pro-Búsqueda அமைப்பு மூலம் சட்டப்போராட்டம் நடத்தி 440 க்கும் மேற்பட்ட
சிறுவர்களை அவர்களின் ரத்தசொந்தங்களிடம் சேர்த்திருக்கிறார். ஊழல், பொருளாதார சீர்குலைவு, கொலைகள்
உள்ளிட்டவற்றால் 6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"இன்று எனக்கு பேரப்பிள்ளைகள் வந்துவிட்டார்கள். இழந்த என் சகோதரர்களுக்கு யாரும் மாற்று ஆகமுடியாது. கடந்தகால உண்மைகளை அறியாதவரை மனதில் உருவான காயங்களை ஆற்றவே முடியாது"
என்கிறார் மார்க்கரிட்டா.