மனித உரிமைக் கமிஷனிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்?
அமெரிக்கா விலகியது ஏன்?
அண்மையில் ஐ.நா மனித
உரிமை கமிஷனிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஜெனிவாவில் செயல்பட்டும்
வரும் ஐ.நா மனித உரிமைக்கமிஷன் 2006 ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆண்டுக்கு மூன்றுமுறை கூடி மனித உரிமைகள் குறித்து
விவாதிக்கும் இவ்வமைப்பிலிருந்து அமெரிக்கா விலகியது பல நாடுகளுக்கு அதிர்ச்சி தந்தாலும்
இஸ்ரேல் மனமுவந்து அம்முடிவை ஆதரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு
அமெரிக்கா ஒபாமா அதிபராக இருக்கும்போது ஐ.நா மனித உரிமை அமைப்பில்
தன்னை இணைத்துக்கொண்டது. இதில் சீனா, ரஷ்யா,
சவுதி அரேபியா, அல்ஜீரியா, வியட்நாம் ஆகியவை அமைப்பில் உறுப்பினரானது அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கியது.
இஸ்ரேல் ஐ.நாவின் மனித உரிமை விமர்சனத்தையும் உறுதியாக புறக்கணித்துவிட்டது. தற்போது வெனிசுலாவின் நடந்த போராட்டம், மனித உரிமை மீறல்களை
கண்டிக்காமல் இஸ்ரேலின் நடந்த மனித உரிமை மீறல்களை ஐ.நா அமைப்பு கேள்வி கேட்க, அமெரிக்கா இதை ஏற்றுக்கொள்ளமுடியாது
என விலகியிருக்கிறது. அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம்,
மூர்க்கமான மனித உரிமை மீறல் என அமெரிக்க அரசின் முடிவை சாடியுள்ளதோடு
உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.